வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான கௌரவ சரத் அமுணுகம அவர்கள் 2018 ஒக்டோபர் 30ஆம் திகதி அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றவுடன் காலிங்க லங்கா ஸ்தாபனத்தின் தாபக தலைவர் மற்றும் முன்னாள் இந்திய வெளிநாட்டு செயலாளர், தூதுவர் லலித் மன்சிங்க் முன்னாள் இந்திய வர்த்தக செயலாளர் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் முறைமை பற்றிய புகழ்பெற்ற நபரான திரு. ராஜீவ் கெஹ்ர், மற்றும்இளைப்பாரிய தூதுவர் திரு. அனப் முகள் மற்றும் பேராசிரியர் எஸ்.டீ முனி, ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர், IDSA யின் புகழ்பெற்ற நபர் மற்றும் முன்னாள் தூதுவர் மற்றும் விசேட தூதுவருமான எமரிட்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு உயர் மட்ட தூதுக்குழுவுக்கு மதிய போசன விருந்தளித்தார்.
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது குறிப்பாக இலங்கையின் சொந்த சூழலில் அமைந்துள்ள அயல்நாடுகள் உட்பட சகல நாடுகள் மத்தியிலும் சிறந்த உறவை வலியுறுத்துகின்றது என்பதை கௌரவ அமைச்சர் வலியுறுத்தினார்.
காலிங்க ஸ்தாபனமானது ஒரிசா மற்றும் இலங்கையை சேர்ந்த ஒத்த கருத்துடைய மக்களால் குறிப்பாக ஒரிசாவைச் சேர்ந்த முன்னாள் காலிங்க மக்கள், மற்றும் இலங்கைவாழ் மக்களுக்கிடையில் கலை, கலாசாரம், கல்வி, திறன் அபிவிருத்தி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பல பரிமாண முன்னெடுப்புக்களை மேற்கொள்வதன் மூலம் பொதுவான மரபை கொண்டாடவும் மற்றும் வரலாற்று ரீதியான உறவை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட சமூக-கலாசார தாபனமாகும்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
31 ஒக்டோபர் 2018