ஜப்பானிய இராஜாங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கசுயுக்கி நகானேயின் விஜயத்தினூடாக இலங்கை-ஜப்பான் இருதரப்பு உறவுகளை வலுவூட்டல்

ஜப்பானிய இராஜாங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கசுயுக்கி நகானேயின் விஜயத்தினூடாக இலங்கை-ஜப்பான் இருதரப்பு உறவுகளை வலுவூட்டல்

ஜப்பானிய இராஜாங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கசுயுக்கி நகானே அவர்கள் 28 ஆகஸ்ட்  முதல் 30 ஆகஸ்ட் 2018 வரை  இலங்கைக்கான  விஜயத்தை மேற்கொண்டார். இராஜாங்க அமைச்சர் நகானே ஜப்பானால் இலங்கைக்கு நன்கொடை செய்யப்பட்ட  இரண்டு கரையோர ரோந்து கப்பல்களை இணைத்துக்கொள்ளும் முகமாக  ஆகஸ்ட் 29ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில இடம்பெற்ற  நிகழ்வில் பங்கேற்றார்.

இந்த விஜயத்தின் போது, இராஜாங்க அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல ஆகியோரை சந்தித்ததுடன், பெருந்தோட்ட கைத்தொழில்கள் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரட்ன ஆகியோரையும் சந்தித்தார்.

இந்த இரண்டு கரையோர ரோந்து கப்பல்களான  “SLCGS Samudra Raksha”       மற்றும் “SLCGS Samaraksha”   ஆகியன இரு நாடுகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட விரிவான பங்குடைமை பற்றிய கூட்டு பிரகடனத்தின் அடிப்படையில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை(ஜெய்கா) மற்றும் இலங்கை அரசாங்கம் அகியவற்றுக்கிடையில்  கைச்சாத்திடப்பட்ட மானிய உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஜப்பானால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த இரண்டு ரோந்து கப்பல்கள் கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் சட்ட அமுலாக்கம் , தேடுதல் மற்றும் மீட்பு, அனர்த்த ஆபத்துக்களை தணித்தல்,  மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு  ஆகிய நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட இலங்கை கடலோர பாதுபாப்பின் திறனை அதிகரிக்கும்.

ஜப்பானிய இராஜாங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பிரதமர் மற்றும் பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகியோருக்கு பெண்கள், சமாதானம், மற்றும் பாதுகாப்பு(WPS) பங்காண்மை பற்றிய ஜீ-7 இன் முன்னெடுப்பு பற்றி விளக்கமளித்தார். அதற்கிணங்க, ஒவ்வொரு ஜீ-7 நாடும் சம்பந்தப்பட்ட ஜக்கிய நாடுகள் தீர்மானங்களின் பிரகாரம்  மேம்பட்ட ஜீ-7 ஒருங்கிணைப்பினூடாக  பெண்கள், சமாதானம், மற்றும் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சிநிரல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் உதவியளிப்பதற்கு  பங்குதார நாடொன்றை தெரிவுசெய்கின்றது.  இந்த முன்னெடுப்பின் கீழ்  இலங்கையின் பெண்கள், சமாதானம், மற்றும் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவளிக்கும் முகமாக ஜப்பான் இலங்கையை பங்காண்மை நாடாக தெரிவுசெய்துள்ளது. இந்த முன்னெடுப்பானது பாலின  சமத்துவம், பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள்  வலுவூட்டப்படல் மற்றும் அவர்களின் மனித உரிமைகளுக்கு மரியாதையளித்தல் என்பன நிலையான சமாதானத்திற்கும் அதனை அடைவதற்கும் அத்தியாவசியமாகும் என்ற அங்கீகாரத்தின்  அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஜப்பானின் உதவிக்கான இலங்கையின் பாராட்டானது இராஜாங்க அமைச்சர் நகானே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

 

 30 ஆகஸ்ட் 2018
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close