இந்து சமுத்திர விளிம்பு  சங்கத்தின் கடல்சார்  பாதுகாப்பு  மற்றும் அபாயமின்மை பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தை 2019 ஆகஸ்ட் 8 மற்றும் 9ஆந் திகதிகளில் இலங்கை நடாத்துகிறது

இந்து சமுத்திர விளிம்பு  சங்கத்தின் கடல்சார்  பாதுகாப்பு  மற்றும் அபாயமின்மை பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தை 2019 ஆகஸ்ட் 8 மற்றும் 9ஆந் திகதிகளில் இலங்கை நடாத்துகிறது

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தை ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆந் திகதிகளில் கொழும்பில் இலங்கை நடாத்துகிறது. பிராந்திய நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவதனை நோக்கி உறுப்பு நாடுகளுடன் இணைந்து இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயற்றிட்டத்தை (2017-21) மேம்படுத்தி, முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த சந்திப்பு இரண்டு ஆண்டுகளுக்கான பணித் திட்டத்தை இறுதி செய்யும்.

இந்து சமுத்திர விளிம்பு சங்கம் என்பது, அதன் 22 உறுப்பு நாடுகள் மற்றும் 09 கலந்துரையாடல் பங்காளர்கள் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்திற்குள் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பலமான அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்பு ஆகும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஒரு நிலையான கடல் சூழலின் முக்கியமான பொருளாதார மற்றும் மூலோபாய பொருத்தப்பாட்டை அங்கீகரித்துள்ள, 2011 நவம்பரில் நடைபெற்ற 11ஆவது இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் சபைக் கூட்டத்தில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் ஆறு (06) முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாக கடல்சார் பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை ஆகியன ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பிராந்தியத்தில் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாகச் சமாளிப்பதற்காக பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக பரந்த அளவிலான நடவடிக்கைகள் வாயிலாக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை குறித்து இந்து சமுத்திர விளிம்பு சங்கம் உரையாற்றி வருகிறது.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை பணிக்குழுவானது, 2018 செப்டம்பரில் நிறுவப்பட்டதுடன், இரண்டு வருட காலப்பகுதிக்கான தலைமைத்துவத்தினை தற்போது இலங்கை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, பணிக்குழுவிற்கான குறிப்பு விதிமுறைகள் கொழும்பில் இறுதி செய்யப்பட்டன.

இலங்கையானது, தனது புவி-மூலோபாய இருப்பிடம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை பிரச்சினைகளில் கொண்டிருக்கும் மாறுபட்ட அனுபவம் ஆகியவற்றின் வாயிலாக இந்த பணிக்குழுவிற்கு நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பெரிதும் உதவுகிறது.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்துடனான ஈடுபாடு இலங்கையின் நீலப்பசுமை பொருளாதார நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும் அதே நேரத்தில் இந்து சமுத்திர கரையோர நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.

சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
2019 ஆகஸ்ட் 5
Please follow and like us:

Close