இந்திய பெருங்கடலின் எதிர்காலத்தை பற்றி விவாதிக்க 2018 அக்டோபர் 11-12 முதல் 40 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் இருந்தனர். "இந்து சமுத்திரம்: எதிர்காலத்தை வரையறுத்தல்", எனும் 1.5 உரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்முயற்சியில் இந்து சமுத்திரத்தின் பிரதான கடல்வழிப் பிராந்தியங்கள் மற்றும் பிரதான கடல்வழி பயனாளர்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளை கொழும்பில் ஒன்று திரட்டியது. எதிர்காலத்தில் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சித் துருவமாக திகழும் சமுத்திரம் மீதான கவனத்தை அதிகரிப்பற்காக இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, சீனா, ஜேர்மனி, நெதர்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சிரேஷ்ட உத்தியோத்தர்கள் உள்ளடங்களாக பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலுமுள்ள முக்கிய சிந்தனாவாதிளும் கலந்து கொண்டனர். சமுத்திரத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவர் பீட்டர் தாம்சன் அவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டின் பிரதான உரையை நிகழ்த்திய போது பிராந்தியத்திற்கான ஊடுருவல் சுதந்திரம் மற்றும் டிஜிடல் தொடர்பு என்பன பராமரிக்கப்பட வேண்டும் என்பதுடன் சமாதானத்தையும் பாதுகாப்பையும் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைந்த புரிதலின் அவசியம் பற்றியும்
வலியுறுத்தினார்.
இந்த மாநாடு இந்து சமுத்திரத்தின் கடல்வழி பிராந்தியங்கள் மற்றும் பயனர்களுக்கான விவாதத்திற்கும், ஒருமித்த கருத்துக்களுக்கும் இடமளித்தது. புதிய பூகோள வளர்ச்சித் துருவமான இந்து சமுத்திரத்தின் எதிர்காலம், கடல் நிலையான மற்றும் குறைந்த மாசுபாடு அபிவிருத்தி மற்றும் ஒரு விதிமுறை அடிப்படையிலான அணுகுமுறையில் இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய நான்கு முக்கிய பகுதிகள் ஆராயப்பட்டன.
இந்த 1.5 உரையாடலின் முடிவில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த தலைவரான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ தி சில்வா, , மாநாட்டின் பொதுக் கருத்தை சுருக்கமாகக் கூறினார்: இந்து சமுத்திரத்தின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது. பிராந்தியத்தின் பொருளாதார விரிவாக்கம், பரந்த அடிப்படையிலான மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், எனவே எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு அர்த்தமுள்ள மரபு உள்ளது. மூலோபாய அவநம்பிக்கை மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் (கடல் எல்லை, மீன்பிடி, மாசுபாடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் கடலுக்கடியில் கேபிள் பாதுகாப்பு போன்றன) பிராந்தியத்தின் அமைதி மற்றும் செழிப்புக்கு கணிசமான சவால்களாக உள்ளன. UNCLOS ஐ மையமாகக் கொண்ட விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச கடல்வழங்கல் கட்டளை இந்து முத்திரத்தின் கடல் மட்டங்கள் மற்றும் கடல்வழி பயனர்களின் நலனுக்காக வலுவூட்ட வேண்டும்.
"இந்து சமுத்திரம்: நமது எதிர்காலத்தை வரையறுத்தல்" மாநாட்டில் பிரதமர் அலுவலகம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, UNODC இன் உலகளாவிய கடல்சார் குற்றவியல் திட்டம் மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் இன்ஸ்டிடியூட் (LKI) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
14 அக்டோபர் 2018