இலங்கையின் தலைமையின் கீழ் ஆரம்பமாகும் அயோரா வர்த்தக மாநாடு

இலங்கையின் தலைமையின் கீழ் ஆரம்பமாகும் அயோரா வர்த்தக மாநாடு

இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, தற்போதைய தலைவரான இலங்கை, வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து, முதலாவது வணிகமாநாட்டை இலங்கையின் தலைமையின் கீழ் நட்சத்திர விடுதியான ஷங்ரிலாவில், 2024, மே 28 முதல் 29 வரை நடாத்தவுள்ளது.

"நிலையான வளர்ச்சி-எல்லைகளை அடைதல்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த வணிக மாநாட்டில், திறம்படு விவசாயம், தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பம், ஏற்பாட்டியல், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி, சிறிய, நடுத்தர மற்றும் பாரிய முயற்சியாண்மைகளின் அபிவிருத்தி, மற்றும் பெண்களுக்கான வலுவூட்டலும் அதிகாரப்பகிர்வும் ஆகிய முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த மாநாடானது அயோராவின் அங்கத்துவ நாடுகளில் தொழில்துறை தலைவர்களுக்கு வலுவான பொருளாதார கூட்டாண்மையை வளர்ப்பதற்கான வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநாட்டில், அயோராவின் 23 அங்கத்துவநாடுகள் மற்றும் 12 உரையாடல் பங்காளர்நாடுகளைச் சேர்ந்த வர்த்தகப் பிரதிநிதிகள் பங்கபற்றுவதுடன், அவர்கள் தங்கள் சகாக்களுடன் கூட்டாற்றலை கட்டியெழுப்புவதற்காக பலதரப்பட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அதிக அனுபவத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வணிக மாநாடானது 2024 மே 30-31 இல் திட்டமிடப்பட்டுள்ள அயோராவின், 26வது சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டத்திற்கு முன்னதாக நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

15 மே 2024

Please follow and like us:

Close