பங்களாதேஷ் தகவல் தொடர்பாடல் துறையுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் முயற்சி

பங்களாதேஷ் தகவல் தொடர்பாடல் துறையுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் முயற்சி

இரு நாடுகளினதும் தகவல் தொடர்பாடல் துறை மற்றும் டிஜிட்டல்  பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வதற்காக, டாக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், இலங்கையில் உள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பங்களாதேஷ் மென்பொருள் மற்றும் தகவல் சேவைகள் சங்கம் ஆகியவற்றின் பங்கேற்புடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை ஜனவரி 05ஆந் திகதி ஏற்பாடு செய்தது.

ஒரு விரிவான விளக்கத்தை அளித்து, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் இணை பிரதான டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சசீந்திர சமரத்ன மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரமைப்பின் பணிப்பாளரும் கைத்தொழில் அபிவிருத்தி பணிப்பாளருமான சிரந்தி பாலபடபெந்தி ஆகியோர் இலங்கையின் தகவல் தொடர்பாடல் துறை, அதன் பலம் மற்றும் ஒத்துழைக்கக்கூடிய சாத்தியமான பகுதிகளை விளக்கினர். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான இலங்கையின் 5 வருட மூலோபாயத்தையும் அவர்கள் விரிவுபடுத்தினர்.

கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கி, பங்களாதேஷ் மென்பொருள் மற்றும் தகவல் சேவைகள் சங்கத்தின் துணைத் தலைவர் ஃபாஹிம் அகமத் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரமைப்பின் அதிகாரிகள், பங்களாதேஷ் மென்பொருள் மற்றும் தகவல் சேவைகள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரமைப்பை இணைத்தல், தகவல் தொடர்பாடல் துறை பிரதிநிதிகளை பரிமாறிக்கொள்ளுதல், தகவல் தொடர்பாடல் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களுடனான தொடர்பை அதிகரித்தல், திறன் அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தியில் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியன உள்ளடங்கலாக ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் குறித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் (வர்த்தகம்) ஸ்ரீமாலி ஜயரத்ன கலந்துகொண்டார்.

 

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

டாக்கா

2023 ஜனவரி 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close