பாராளுமன்ற உயர் பதவிக் குழு பதினான்கு தொழில் இராஜதந்திரிகளின் முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்டுள்ளது.

பாராளுமன்ற உயர் பதவிக் குழு பதினான்கு தொழில் இராஜதந்திரிகளின் முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்டுள்ளது.

நாட்டு சேவை மற்றும் சங்கங்களுக்கு நியமிக்கப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட நபர்களின் தகுதியை பரீட்சிப்பதற்கான இலங்கை பாராளுமன்றத்தின் உயர்பதவிகளுக்கான குழு (உயர்பதவிகள் குழு) வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் தலைவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களால் முன்மொழியப்பட்ட பதினான்கு தொழில் இராஜதந்திரிகளின் நியமனங்களை புதன் கிழமை 27 மார்ச் ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

தூதரகங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை வெளிநாட்டுச் சேவையின் தரம் 1 ஐ சேர்ந்த பதினான்கு சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் கீழ்வருமாரு:

திருமதி கே.டி. செனவிரத்ன, நிவ்யோர்கிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, திரு ரொட்னி எம். பெரேரா, ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர், திருமதி. கிரேஸ் ஆசிர்வாதம், பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை தூதுவர், திரு ஏ.எஸ் நாகந்தல, நெதர்லாந்துக்கான இலங்கை தூதுவர் மற்றும் இரசாயன ஆயுதங்களை தடுப்பதற்கான நிறுவனத்தின் (OPCW) நிரந்தரப் பிரதிநிதி, செல்வி. வை,கே. குணசேகர, இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவர், திருமதி ஜே.ஏ.எஸ்.கே. ஜயசூரிய, தாய்லாந்துக்கான இலங்கை தூதுவர், திருமதி. பிரதீபா சாரம், பஹ்ரைனுக்கான இலங்கை தூதுவர், திருமதி. சோபினி குணசேகர, பிலிபீன்சுக்கான இலங்கை தூதுவர், திருமதி. சரோஜா சிரிசேன, ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கை தூதுவர் மற்றும் சர்வதேச அனுச் சக்தி முகவர் நிலையத்திற்கான (IAEA) நிரந்தரப் பிரதிநிதி, திரு. ஓ.எல். அமீர் அஜ்வத், ஓமானுக்கான இலங்கை தூதுவர், திரு. எம்.ஜே.பி. ஜயசிங்ஹ, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதுவர், திரு. வருன வில்பாத, இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர், செல்வி. சசிகலா பிரேமவர்தன, சிங்கபூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், திரு. ரிஸ்வி ஹஸன், துருக்கிக்கான இலங்கை தூதுவர்.

இந்த நியமனங்களுடன், வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் தலைமைப் பொறுப்புக்களை வகிக்கின்ற தொழில் இராஜதந்திரிகளின் வீதம் 36.57 என்பதிலிருந்து 46 ஆக அதிகரித்திருக்கின்றது. இலங்கையானது 52 தூதரங்கள் அல்லது உயர்ஸ்தானிகராலயங்களை வெளிநாடுகளில் பராமரித்து வருகின்றது.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
30 மார்ச் 2019
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close