பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் உள்ள இலங்கையின் கௌரவ உதவித்தூதுவர் மோனிக் டி டெக்கர்-டெப்ரெஸ், பிரஸ்ஸல்ஸில் உள்ள தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம் அவர்களிடமிருந்து தனது சேவை நீட்டிப்பு கடிதத்தைப் பெற்றார்.
மோனிக் டி டெக்கர்-டெப்ரெஸ் ,1997 ஆம் ஆண்டு ஜூலை ஆன்ட்வெர்ப்பில் இலங்கையின் மேன்மைதங்கிய கௌரவ உதவித்தூதராக தனது பயணத்தைத் தொடங்கியதுடன், அவரது தன்னிகரற்ற அர்ப்பணிப்பு மிக்க சேவை, வெற்றிகரமான 26 ஆண்டுகள் நீடித்தது. இலங்கைக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக 2005 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் "இலங்கை ரஞ்சனா" என்ற தேசிய பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
இலங்கையின் கௌரவ உதவித்தூதுவர், மோனிக் டி டெக்கர்-டெப்ரெஸ், பெல்ஜியத்திலுள்ள பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நூற்றி இருபது கௌரவ உதவித்தூதுவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, தூதரக ஒன்றியத்தின் தலைவர் பதவியை வகிக்கிறார்.
ஆண்ட்வெர்ப் பெல்ஜியத்தின் பொருளாதார சக்தி மையமாவதுடன், ஐரோப்பாவின் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பெல்ஜியத்திற்குள் அடங்கிய, ஆன்ட்வெர்ப்பின் பொருளாதார, கலாச்சார, இராஜதந்திர முக்கியத்துவம் மற்றும் இலங்கை சமூகத்தின் செறிவு ஆகியவை, இலங்கையின் கௌரவ உதவித் தூதரகத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு முக்கியமான இடமாக மாற்றியது.
இலங்கை தூதரகம்
பிரஸ்ஸல்ஸ்
08 செப்டம்பர் 2023