காசியான்டெப்பில் உள்ள இலங்கைக்கான கௌரவத் தூதுவர் துருக்கிக்கான இலங்கைத் தூதுவருடன் சந்திப்பு

காசியான்டெப்பில் உள்ள இலங்கைக்கான கௌரவத் தூதுவர் துருக்கிக்கான இலங்கைத் தூதுவருடன் சந்திப்பு

காசியான்டெப்பில் உள்ள இலங்கைக்கான கௌரவத் தூதுவர் சுலேமான் சிசெக்  அண்மையில் தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திஸாநாயக்கவை சந்தித்தார்.

காசியான்டெப் என்பது தென்கிழக்கு அனடோலியன் பிராந்தியத்தின் நவீன மாகாணங்களில் ஒன்றாவதுடன், துருக்கியில் பிஸ்தா அறுவடையின் மையமாகும். விரிவான ஒலிவ் தோப்புக்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களுடன், காசியான்டெப் துருக்கியின் முக்கிய விவசாய செயலாக்க மையங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

மரியாதை நிமித்தமான இந்த விஜயமானது, தற்போதைய வணிக நோக்கம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் பரிமாறிக் கொள்வதற்கும், காஸியான்டெப்பில் எதிர்கால சாத்தியக்கூறுகளை நடைமுறை ரீதியாக மதிப்பிடுவதற்கும் இரு தரப்பினருக்கும் வாய்ப்பளித்தது. தானியங்கள், பருப்பு வகைகள், விதைகள் மற்றும் உலர் பழங்கள் வியாபாரியான சாடிக் காயாவும் கௌரவத் தூதுவருடன் வருகை தந்திருந்தார். இலங்கையில் இருந்து விதைகள் மற்றும் உலர் பழங்கள் / காய்கறிகள், சுவையூட்டிப் பொருட்கள் மற்றும் தேயிலை ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மூலிகை அழகுசாதனப் பொருட்கள், மூலிகை ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் ஆயுர்வேத மருந்து மற்றும் சிகிச்சை ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்தும் கந்துரையாடப்பட்டது. இலங்கையில் சொக்லேட் உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு துருக்கிய உற்பத்தி நிறுவனம் ஒன்றின் சாத்தியத்தையும் தூதுவர் பரிந்துரைத்தார்.

மேலும், தூதுவர் திஸாநாயக்க, இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கைகள், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை வினைத்திறனுள்ள முறையில் மேம்படுத்துதல் மற்றும் முதலீட்டைப் பாதுகாத்தல் தொடர்பான உடன்படிக்கைகள், இரட்டை  வரி விதிப்பைத் தவிரத்தல் மற்றும் சுங்க விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

உள்ளூர் தேயிலை வியாபாரிகள் சிங்க சின்னத்தை தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பதற்காக தான் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து கௌரவத் தூதுவர் சிசெக் விளக்கியதுடன், நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதாக உறுதியளித்தார். அவரது உடனடி நடவடிக்கைக்கு தூதுவர் நன்றி தெரிவித்தார்.

கலந்துரையாடலின் முடிவில், இலங்கைக்கான புதிய வர்த்தக வாய்ப்புக்கள், சுற்றுலா மற்றும் முதலீட்டை ஈர்ப்பதற்காக காஸியான்டெப் பிராந்தியத்தில் இலங்கையை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை கௌரவத் தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2023 ஜனவரி 25

Please follow and like us:

Close