உயர் ஸ்தானிகர் எஸ். அமரசேகர தனது நற்சான்றிதழ்களை தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி அதி மேதகு சிரில் ரமபோசாவிடம் கையளிப்பு

உயர் ஸ்தானிகர் எஸ். அமரசேகர தனது நற்சான்றிதழ்களை தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி அதி மேதகு சிரில் ரமபோசாவிடம் கையளிப்பு

உயர் ஸ்தானிகர் எஸ். அமரசேகர தனது நற்சான்றிதழ்களை தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி அதி மேதகு சிரில் ரமபோசா அவர்களிடம் 2021 ஏப்ரல் 14 ஆந் திகதி பிரிட்டோரியாவில் உள்ள செஃபாகோ எம் மக்காத்தோ ஜனாதிபதி விருந்தினர் மாளிகையில் வைத்து, ஏனைய நாடுகளைச் சேர்ந்த 8 தூதுவர்களுடன் கையளித்தார்.

கோவிட்-19 சுகாதார நெறிமுறைகளுக்கு இணங்க விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 1வது கட்டத்தில், ஒவ்வொரு தூதுவருக்கும் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டு, ஜனாதிபதி ரமபோசாவிடம் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்வதற்காக பார்வையாளர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், விழாவின் 2வது கட்டத்தில் முந்தைய தூதுவரை திரும்ப அழைக்கும் கடிதமும், உயர் ஸ்தானிகர் அமரசேகரவின் நற்சான்றிதழ்களும் கையளிக்கப்பட்டன.

தென்னாபிரிக்காவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரின் நற்சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், ஜனாதிபதி ரமபோசா இலங்கைக்கான தனது விஜயங்களை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த அதே வேளை, இரு நாடுகளினதும் சுற்றுலாத் துறைகளில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இரு நாடுகளுக்குமிடையிலான மக்களுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தனது பதிலில் உயர் ஸ்தானிகர் அமரசேகர எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் உயர்ஸ்தானிகர் தனது பாரியார் திருமதி. ஹேமா அமரசேகரவுடன் கலந்து கொண்டார்.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்
பிரிட்டோரியா

2021 ஏப்ரல் 20

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close