பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கராச்சிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கராச்சிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம 2022 நவம்பர் 26 முதல் 29 வரை கராச்சிக்கு விஜயம் செய்து வர்த்தக சமூகங்கள் மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

சட்டத்தரணி மற்றும் சிரேஷ்ட பங்குதாரர் மாண்ட்விவல்லா மற்றும் ஜஃபர் மெஹ்மூத் மாண்ட்விவல்லாவிடம் சிந்து மாகாணத்தில் ஹைதராபாத்திற்கான இலங்கையின் கௌரவத் தூதுவராக நியமிக்கும் நியமன ஆணையை உயர்ஸ்தானிகர் முறையாக ஒப்படைத்தார்.

கௌரவ தூதுவர் மாண்ட்விவல்லாவினால் அவரது இல்லத்தில் முக்கிய அரசாங்க, வர்த்தக மற்றும் கூட்டுத்தாபன நிறுவனங்களின் பங்குபற்றலுடன் இரவு விருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உயர்ஸ்தானிகர் கராச்சியில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

நவம்பர் 28 திங்கட்கிழமை, கராச்சியை தளமாகக் கொண்ட அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் கலந்து கொண்ட வலையமைப்பு மதிய விருந்திலும் உயர்ஸ்தானிகர் கலந்து கொண்டார். கராச்சி ஆணையாளர் எம். இக்பால் மேமன், பாகிஸ்தானின் சுங்கத்துறை (போக்குவரத்து) பணிப்பாளர் நாயகம் கலாநிதி இப்திகார் அகமது, கராச்சி வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் பிரதிநிதிகள், பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக மன்றம், பாகிஸ்தான் கட்டட நிர்மாணிப்பாளர்கள் மற்றும் உருவாக்குநர்கள் சங்கம், பாகிஸ்தான் நூல் வணிகர் சங்கம், பாகிஸ்தான் மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம், பாகிஸ்தான் கண் வங்கிச் சங்கம் மற்றும் ஆங்கிலம் பேசும் ஒன்றியம் ஆகியவை மதிய விருந்தில் கலந்துகொண்டன.

இந்த விஜயத்தின் போது, பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக மன்றத்தின் தலைவர் அஸ்லம் பகாலி மற்றும் அலுவலகப் பணியாளர்களைச் சந்தித்த உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முன்னோக்கிய வழிகள் குறித்து கலந்துரையாடினார்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள முதன்மையான கராச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உயர்ஸ்தானிகர் கலந்து கொண்டார். கராச்சியில் உள்ள வணிகம் மற்றும் தொழில்துறை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கராச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம், தேசிய திறைசேரிக்கும், 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரத்திற்கும் 65மூ க்கும் அதிகமான வருமானத்தை வழங்குகின்றது. இது பாக்கிஸ்தான் மற்றும் துணைக் கண்டத்தின் மிகப்பெரிய மன்றம் ஆகும்.

கராச்சியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஜெனரல் ஜகத் அபேவர்ண, பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அமைச்சர் ஆலோசகர் யு.எல். நியாஸ் மற்றும் ஹைதராபாத்துக்கான இலங்கையின் கௌரவத் தூதுவர் மெஹ்மூத் மந்த்விவல்லா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கராச்சியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் கராச்சியில் உள்ள தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து உயர்ஸ்தானிகருக்கான நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தது.

இலங்கையின் துணைத்தூதரகம்,

கராச்சி

05 டிசம்பர் 2022

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close