இலங்கைக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தியாவின் ஜீ20  தலைமைப் பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளருடன் உயர்ஸ்தானிகர்   மொரகொட சந்திப்பு

இலங்கைக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தியாவின் ஜீ20  தலைமைப் பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளருடன் உயர்ஸ்தானிகர்   மொரகொட சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, 2023ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜீ20 தலைமைப் பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை 2022 டிசம்பர் 12ஆந் திகதி புது தில்லியில் சந்தித்தார்.

இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது இலங்கை ஜீ20 உடன் ஈடுபடக்கூடிய பல்வேறு  வழிகள் மற்றும் சர்வதேச நிதி ஒத்துழைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான ஜீ20 அணுகுமுறையைப் புரிந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது குறிப்பாக கவனம் செலுத்தியது.

உயர்ஸ்தானிகர் மொரகொட மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், இந்தியாவின்  அண்டை நாடான இலங்கைக்கு ஜி20 அமைப்பின் பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடினர்.

2022 டிசம்பர் 01ஆந் திகதி ஒரு வருட காலத்திற்கு ஜி20 தலைமைப் பதவியை இந்தியா  ஏற்றுக்கொண்டது. அதன் தலைமைப் பதிவியின் கீழ், டிசம்பர் 2022 முதல் நாடு முழுவதும் 56 நகரங்களில் 200 ஜி20 கூட்டங்களை இந்தியா நடாத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு 2023 செப்டம்பர் 09 மற்றும் 10 ஆகிய திகதிகளில் புதுதில்லியில் நடைபெற உள்ளது.

ஜி20 அல்லது இருபதுகளின் குழு என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை  உள்ளடக்கிய ஒரு அரசுகளுக்கிடையேயான மன்றமாவதுடன், சர்வதேச நிதி நிலைத்தன்மை, காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் நிலையான அபிவிருத்தி போன்ற உலகப் பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இது செயற்படுகின்றது.

இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளராக பதவியேற்கும்  முன், ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராக செயற்பட்டார். இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரியான இவர், தாய்லாந்து, பங்களாதேஷ் மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது தில்லி

2022 டிசம்பர் 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close