உயர்ஸ்தானிகர் மொரகொட புதுடில்லியிலுள்ள இலங்கை பௌத்த யாத்திரிகர்களுக்கான இளைப்பாறும் மடத்திற்கான புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை பரிசீலனை செய்தமை

 உயர்ஸ்தானிகர் மொரகொட புதுடில்லியிலுள்ள இலங்கை பௌத்த யாத்திரிகர்களுக்கான இளைப்பாறும் மடத்திற்கான புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை பரிசீலனை செய்தமை

இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட அவர்கள்,  2023 செப்டம்பர் 22 அன்று, புது டில்லியிலுள்ள இலங்கை பௌத்த யாத்திரீகர்களுக்கான இளைப்பாறும் மடத்தில் (SLBPR) நடந்து வரும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.

யாத்ரீகர்கள் இளைப்பாறும் மடமானது, புது டில்லியின் பிரதான ரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளதுடன், இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. புனித பௌத்த தலங்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இந்தியாவிற்கு வருகை தரும் பெருமளவிலான இலங்கை மற்றும் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், உயர் ஸ்தானிகராலயம் இந்த ஆண்டு ஜூன் மாதம் தற்போதுள்ள SLBPR இனது உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மிகவும் தேவையான புனரமைப்பு பணிகளை ஆரம்பித்தது.

உயர்ஸ்தானிகர் மொரகொட, ஆய்வுச் சுற்றுப்பயணத்தின் போது தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினரைச் சந்தித்து அவர்களின் கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். திட்டமிட்டபடி நவம்பர் முதல் வாரத்திற்குள் சீரமைப்புப் பணிகளை முடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகள்,  உயர்ஸ்தானிகருடன் இணைந்துகொண்டனர்.

 

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்

புது டில்லி

25 செப்டம்பர் 2023

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close