ஒத்துழைப்பதற்கான முன்னுரிமைப் பகுதிகள் குறித்து உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்துரையாடல்

ஒத்துழைப்பதற்கான முன்னுரிமைப் பகுதிகள் குறித்து உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்துரையாடல்

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் குமார் தோவாலை ஜனவரி 16ஆந் திகதி சந்தித்து, இந்தியா - இலங்கை உறவுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். இரு நாடுகளின் பரஸ்பர மூலோபாய நலன்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான முன்னுரிமைப் பகுதிகள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கு இடையிலான வழக்கமான மற்றும் தொடர் உரையாடலின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது தில்லி

2023 ஜனவரி 17

Please follow and like us:

Close