நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022  ஆகஸ்ட் 09ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

பல தசாப்தங்களாக நிலவி வரும் நட்பு ரீதியான நல்லுறவுகளைக் குறிப்பிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்,  சவாலான காலங்களில் நியூசிலாந்து நல்கிய தொடர்ச்சியான ஆதரவு மற்றும் உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக  அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து உயர்ஸ்தானிகரிடம் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கைக்கான நியூசிலாந்து அரசாங்கத்தில்ன் தொடர்ச்சியான உதவிகளை உயர்ஸ்தானிகர் அப்பிள்டன்  உறுதியளித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இச்  சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஆகஸ்ட் 10

Please follow and like us:

Close