வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இலங்கை வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார இராஜதந்திர பேச்சுவார்த்தையின்பிரியாவிடை வைபவம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) அமைச்சில் நடைபெற்றது. இத்திட்டத்தின் முடிவில் 23 நாடுகளிலிருந்து பங்கேற்ற இராஜதந்திரிகள் தங்களது சான்றிதழ்களை வெளியுறவு செயலாளர் பிரசாத் காரியவசம் அவர்களிடமிருந்து பெற்றனர்.
வெளியுறவு அமைச்சின் பொருளாதார இராஜதந்திர நிகழ்ச்சியின்(EDP) ஒரு பகுதியாக பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் (பி.ஐ.டி.ரி.ஐ) மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனம் (எல்.கே.ஐ) ஆகியவற்றுடன் இணைந்து இரண்டு வார காலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டஇந்நிகழ்ச்சியில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பூட்டான், பிரேஸில், சீனா, கியூபா, எகிப்து, இந்தியா, கென்யா, மலேசியா, மாலைதீவுகள், மங்கோலியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பாலஸ்தீனம், செனகல், சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, தாய்லாந்து, ஐக்கியஅறபுஇராச்சியம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளிக்கிழமைஆரம்பத்தில், இராஜதந்திரிகள் பாராளுமன்றத்தினையும் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவையும் சந்தித்தனர்.
வெளிநாட்டு செயலாளர் பிரசாத் காரியவசம், பொருளாதார விவகாரங்கள் மற்றும் வர்த்தக பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார இராஜதந்திர உரையாடல் 2018, அமைச்சின் உயர்தர உற்பத்தியாகும் எனவும், ஏனைய உலகநாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கான இலங்கையின் சாத்தியமான திறனையும் எடுத்துக்காட்டுகிறது என்றும் ஐ.நா. பொதுச் செயலர் ஜெனரல் அன்டோனியோ கெடரெஸ்ஐ.நா. பொதுச்சபையின்போது வலியுறுத்திய இன்றைய துருவமுனை உலகில் பன்முகத்தன்மையின்தொடர்புபற்றி குறிப்பிட்டு விட்டு நாடுகளுக்கிடையே பன்முகத்தன்மை மற்றும் நட்பை மேம்படுத்துவதில் இலங்கையின் வகிபங்குதொடர்பாகவே உரையாடல் அமைந்திருந்தது என்றும் அவர்குறிப்பிட்டார். இந்த இயற்கையின் முயற்சிகளால் பகிர்ந்து கொள்ளப்பட்ட அனுபவங்கள் மற்றும் உண்டான நட்புகள் ஆகியவை பொருளாதார ரீதியாக ஒருமித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும்அவர் கருத்துதெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் ரவிநாத ஆரியசின்ஹ பங்கேற்பு இராஜதந்திரிகளுக்கிடையிலான இலங்கை பற்றிய புரிதலையும் நாடுகளுக்கிடையிலான சவால்கள் மற்றும் வாய்ப்புக்களையும் இக்கலந்துரையாடல்முன்னெடுத்ததாக தெரிவித்தார். மேலும் இது வெளியுறவு அமைச்சின் பொருளாதார இராஜதந்திர திட்டத்திற்கான மதிப்பைவளர்த்ததுடன் வெளிநாடுகளில் இலங்கை தூதரகங்கள் மூலம் இலங்கையை ஊக்குவிப்பதற்கும் இது உதவியது என்றும் எதிர்காலத்திலும் அனைத்து பங்கேற்பாளர்களும் தொடர்புடன்இருப்பதை உறுதி செய்வதற்காக அமைச்சு வேலை செய்யும் என்றும் அவர் கூறினார்.
பமீலா ஜே. டீன் BIDTI பணிப்பாளர் நாயகம் வருடாந்த உரையாடல் நிகழ்வின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, நிகழ்ச்சித்திட்டத்தின் போது அவர்கள் காட்டிய அர்ப்பணிப்புக்காக 23 பங்கேற்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். எல்.கே.ஐ.யின் நிறைவேற்றுபணிப்பாளரான டாக்டர் கணேசன் விக்னராஜா உரையாடல்களின்போது பங்கேற்பாளர்களின் வெளிப்படையான தன்மை மற்றும் அவர்களது அறிவுப்பரிமாறல்களைசுட்டிக்காட்டினார்.
இலங்கையின் அபிவிருத்தியைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும், அவர்கள் 23 பேரும் இலங்கையின் தூதர்களாக திரும்பிவருவதாகவும் கலந்து கொண்ட இராஜதந்திரிகளின் சார்பில் இறுதி உரையை வழங்கிய அவுஸ்திரேலியாவைச் சார்ந்த செல்விபீட்டா ஹெலன் டொனால்ட் தெரிவித்தார். அனைத்து பங்கேற்பாளர்களின் சார்பாக, நிகழ்ச்சிக்காக செய்யப்பட்ட சிறந்த ஏற்பாடுகளை அவர் பாராட்டினார்.மற்றும் உரையாடல் அதன் இலக்குகளை நோக்கி நகர்த்தப்பட்டிருந்ததாகவும்குறிப்பிட்டார்.
இரண்டு வாரகாலத்தைக் கொண்ட இவ்வேலைத்திட்டம் இலங்கையின் பிரதான அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தனியார் துறையின் தலைவர்களுடனான கலந்துரையாடல்களை கொண்டிருந்தது. இது இலங்கையின் பொருளாதாரம் மீது கவனம் செலுத்தியது. கண்டி, தம்புள்ள, சீகிரியா, பொலன்னறுவை, மின்னேரியா இயற்கை நீர்த்தேக்கம் மற்றும் பாசிக்குடா உட்பட நாட்டின் வரலாற்று, பண்பாட்டு, பொருளாதார மற்றும் சுற்றுலாத் தளங்களைக் காண்பிக்கும் மூன்றுநாள் கள விஜயத்தை ஏற்பாடு செய்ததன் மூலம் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் (SLTPB) இந்த திட்டத்திற்கு உதவியது. இராஜதந்திரிகள் இலங்கையின் நனோ தொழில்நுட்பக் கழகம் மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவற்றையும் பார்வையிட்டதுடன், காலி யாச் மெரினாவில் '2018 ஆம் ஆண்டின் படகுக்காட்சிமற்றும் படகு விழாவில்' ஏற்றுமதி அபிவிருத்தி வாரியத்தின் (EDB) விருந்தினர்களாகவும் இருந்தார்கள்.