வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன 2024, ஜூலை 12 அன்று ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நடைபெறவுள்ள 05 வது அமெரிக்க-இலங்கை கூட்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
05வது அமெரிக்க-இலங்கை கூட்டுறவுக்கான உரையாடல் வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பதில் துணைச் செயலாளர் ஜோன் பாஸ் ஆகியோரால் இணைத் தலைமையில் நடத்தப்படும்.
கூட்டாண்மை பேச்சுவார்த்தையில், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட, ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள், காலநிலை மாற்றம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையிலான இடைத்தொடர்புகள் ஆகிய அமெரிக்க-இலங்கை இருதரப்பு உறவுகளின் பன்முக அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்.
மேலும், ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க, இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டுப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 ஜூலை 09