வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அரசியல் விவகாரங்களுக்கானபதில் துணை செயலாளர் ஜான் பாஸ் ஆகியோர் "பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான அபிலாஷை" எனும் கூற்றிற்கமைவான, 5 ஆவது இலங்கை- அமெரிக்க கூட்டாண்மைக்கான உரையாடலை நிறைவு செய்தனர்

வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அரசியல் விவகாரங்களுக்கானபதில் துணை செயலாளர் ஜான் பாஸ் ஆகியோர் “பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான அபிலாஷை” எனும் கூற்றிற்கமைவான, 5 ஆவது இலங்கை- அமெரிக்க கூட்டாண்மைக்கான உரையாடலை நிறைவு செய்தனர்

5வது இலங்கை - அமெரிக்கா கூட்டாண்மை உரையாடல், 2024 ஜூலை 12 அன்று வாஷிங்டன், டி.சி.யில் முடிவடைந்தது. இலங்கை பிரதிநிதிகள் குழுவுக்கு வெளியுறவு அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமை வகித்ததுடன், அமெரிக்கக் குழுவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பதில் துணைச் செயலாளர் ஜான் பாஸ் தலைமை தாங்கினார்.

இலங்கை தூதுக்குழுவில் தூதுவர் மஹிந்த சமரசிங்க, வொஷிங்டன் டி.சி மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அமெரிக்க பிரதிநிதிகள் குழு, ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களம், அமெரிக்க திறைசேரி, அமெரிக்க பாதுகாப்பு துறை, சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகவரமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு சபை, வெள்ளை மாளிகை ஆகியவற்றின் சிரேஷ்ட பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது.

ஜூலை 12 ஆம் தேதி வாஷிங்டன், டி.சி.யில் நடைபெற்ற ஐந்தாவது அமெரிக்கா-இலங்கை கூட்டாண்மை உரையாடலின் போது அமெரிக்க மற்றும் இலங்கை அரசாங்கங்களால் பின்வரும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொடக்க உரை: 

2024 ஜூலை 12 அன்று வாஷிங்டன் டி.சி.யில் இடம்பெற்ற, ஐந்தாவது அமெரிக்க -இலங்கை கூட்டாண்மை உரையாடலானது, பொருளாதார செழுமை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, நிலையான வளர்ச்சி, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் மக்களுக்கிடையிலான பரிமாற்றம் ஆகியவற்றில் தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பதில் துணைச் செயலாளர் ஜோன் பாஸ் மற்றும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் மற்றும் தேசிய இறையாண்மைக்கான மரியாதையை நிலைநிறுத்துவதில் உறுதியாக வேரூன்றிய இருதரப்பு உறவுக்கான தங்கள் உறுதிப்பாட்டை அமெரிக்காவும் இலங்கையும் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தன.

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளை அமெரிக்கா வரவேற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் மற்றும் சீர்திருத்தங்களுக்கு இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்பானது மீட்சி, நிதி நிர்வாகம் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கும்.  கடந்தகால இடர்பாடுகளின்போது, கால் பில்லியன் அமெரிக்க டொலர்களினையும் மிஞ்சிய அமெரிக்காவின் பொருளாதார உதவிக்கு இலங்கை தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தது. நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு, பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளித்து வருகிறது.

சந்தை அணுகல், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கான தங்கள் நோக்கத்தை இரு பிரதிநிதிகளும் மீண்டும் வலியுறுத்தினர்.  தனியார் துறை முதலீட்டை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிரான திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான உணவுப் பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றின் மூலம் இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்கா வெளிப்படுத்தியது.  பெண்களை வலுவூட்டும் சட்டத்தின் மூலம் பெண்களுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகள் உட்பட சமூக பாதுகாப்பு வலையமைப்பில் இலங்கை அரசாங்கத்தின் அதிகரித்த முதலீட்டை அமெரிக்க பிரதிநிதிகள் வரவேற்றனர்.  முக்கியமான  உட்கட்டமைப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் முதலீடாக கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 553 மில்லியன் டொலர்களை வழங்கும் அமெரிக்க சர்வதேச அபிவிருத்திக்கான நிதிக் கூட்டுத்தாபனத்தின் பங்களிப்பை இலங்கை வரவேற்றது. இலங்கையில் முதலீடு செய்வதற்கான கூடுதல் வாய்ப்புகளை சர்வதேச அபிவிருத்திக்கான நிதிக்கூட்டுத்தாபனம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.  எதிர்வரும் ஆண்டில் அமெரிக்க-இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு உடன்படிக்கையின் கீழ் தொடரும் கலந்துரையாடல்களை பிரதிநிதிகள் வரவேற்றதுடன் அவர்கள் இருதரப்பு வர்த்தக பிரச்சினைகள் குறித்தும் கலந்தாலோசிக்கவுள்ளனர்.

பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன.  2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து 70 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்து, 2050 ஆம் ஆண்டளவில் கார்பன் நடுநிலையை அடைவதற்கான இலங்கையின் இலக்கை அமெரிக்கா வரவேற்றுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியின் இலங்கை எரிசக்தி திட்டத்தின் கீழ் அமெரிக்கா உதவி வழங்குகிறது.  எரிசக்தி துறை சீர்திருத்தத்தை ஆதரிப்பதற்கான தொழில்நுட்ப உதவி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் குழாய்த்திட்டம் உட்பட, இவ்விலக்குகளை அடைவதற்கு உதவியாக தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க மானிய உதவிகளுக்கு இலங்கை பாராட்டு தெரிவித்தது.  உலகளாவிய காலநிலை நிதியளிப்பு இலக்குகளை அடைவதற்கான அமெரிக்காவின் ஆதரவை இலங்கை பாராட்டியதுடன், 2023 இல் காலநிலை மாற்றங்களுக்கான மாநாடு- COP 28 இன் போது கலந்துரையாடப்பட்ட அதன் ஆற்றல் மாற்றத்திற்கு நிதியளிப்பதில் அமெரிக்க ஆதரவை வரவேற்றது.

வெளிப்படைத்தன்மை, நிர்வாகம் மற்றும் பொருளாதார பின்னடைவை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள்,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பின்னடைவை மேம்படுத்துதல்; மற்றும் வலுப்பாதுகாப்பு நிலைத்தன்மையை மேம்படுத்துதல் உட்பட, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் ஊடாக இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான தனது நோக்கத்தை அமெரிக்கா வெளிப்படுத்தியது. இலங்கையில் நிலையான விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரகத்தின், வரவிருக்கும் ஐந்தாண்டு செயற்றிட்டம் பற்றிய அறிவிப்பும் இதில் அடங்கும்.

இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, பாடசாலைமட்டத்திலான சிறுவர்களின் போஷாக்கு மற்றும் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்க பிரதிநிதிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.  இந்நடவடிக்கைகள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் என்பதை இரு தரப்பினரும் அங்கீகரித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் (USDA)/ சர்வதேச விவசாய சேவையின் கல்விக்கான ஊட்டச்சத்துமிக்க உணவு McGovern-Dole Food for Education Program PALAM/A நிகழ்ச்சித் திட்டத்துடனான Save the Children மற்றும் 32.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள ஐந்தாண்டு காலத்திற்கான தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தில் சுமார் 200,000 மாணவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இவ்வெற்றிகரமான திட்டத்தை இலங்கை பாராட்டியது.

சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க அர்ப்பணிப்பை பிரதிநிதிகள் உறுதிப்படுத்தினர்.  இலங்கை இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) தலைவராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உட்பட, இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பான கடல்சார் களத்தை இலக்காகக் கொண்ட கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பைத் தொடர இலங்கையும் அமெரிக்காவும் தீர்மானித்துள்ளன. இலங்கையின் கடல்சார் கள விழிப்புணர்வை வலுப்படுத்தவும், மனிதாபிமான மற்றும் பேரழிவுக்குப் பிந்தைய தேவைகளுக்குப் பதிலளிப்பதற்காகவும், $30.18 மில்லியன் பெறுமதியிலான ஐக்கிய அமெரிக்க Excess Defense Articles  திட்டம் மற்றும் King Air  விமானம் மூலம் மாற்றப்பட்ட நான்காவது உயர் சகிப்புத்தன்மை கொண்ட திட்டமிட்ட High Endurance U.S. Coast Guard Cutter இன்  வருகையை இலங்கை வரவேற்றது.

மனிதாபிமான ரீதியிலான கண்ணிவெடி அகற்றல் மற்றும் பேரிடர் நிவாரணம் மற்றும் பதிலளிப்பு, கூட்டு இராணுவ ஈடுபாடுகள், இணைய பாதுகாப்பு மற்றும் துறைமுக பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அமெரிக்க ஆதரவு உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறை ஒத்துழைப்பை இரு பிரதிநிதிகளும் வரவேற்றனர்.  இலங்கையின் நீர்ப்பரப்பிற்குரிய வரைபட உருவாக்கத்திறன்கள் மற்றும் இந்தத் துறையில் பணியாளர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஆதரவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.  செங்கடலில் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான கடற்பயணத்தை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் இலங்கைக்கு அமெரிக்கா நன்றி தெரிவித்தது.

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்றதுடன், இப்பிரச்சினைகளில் இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை ஊக்குவித்தது.  ஜனநாயகம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான நல்லிணக்கம் மற்றும் உள்நாட்டுப் பொறிமுறைகள் குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அமெரிக்காவுக்குத் தெரிவித்தது.  பங்குதாரர்களின் உள்ளீட்டை உட்செலுத்துவதுடன், இவ்விவகாரங்களில் தொடர்ந்து முன்னேறுமாறு அமெரிக்கா இலங்கையை ஊக்குவித்தது.  இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஊழல் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதையும், அரசிடம் இருந்த காணிகளை அசல் உரிமையாளர்களுக்கு மீண்டும் விடுவிப்பதையும் அமெரிக்கா பாராட்டியது.

கல்வி மற்றும் கலாசாரத்தில் இரு நாடுகளுக்குமிடையே நடந்துவரும் ஒத்துழைப்பிற்கு இரு பிரதிநிதிகளும் வலுவான ஆதரவை தெரிவித்தனர். கடந்த 23 வருடங்களாக அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட நிதியுதவியின் ஊடாக இலங்கையின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அங்கீகரித்து பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிநிதிகள் வரவேற்றனர்.  Full bright  திட்டம் போன்ற கல்விப் பரிமாற்றங்களின் மதிப்பை அமெரிக்கா வலியுறுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பல்கலைக்கழக கூட்டாண்மைகள், கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் வெளிநாட்டு ஆய்வு மற்றும் பரிமாற்றங்களுக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்த ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியது.  கொழும்பில் இருந்து வெளிவரும் பிராந்திய தலைமைத்துவ பயிற்சித் திட்டமான அமெரிக்க அரசாங்கத்தின் இளம் தெற்காசிய தலைமைத்துவ முன்முயற்சியின் தொடக்கத்தை அமெரிக்கா முன்னிலைப்படுத்தியது.  இலங்கையின் கல்வித் துறையை வலுப்படுத்த ஆங்கில மொழி கற்பித்தல், ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்ட மேம்பாடு மற்றும் பிற ஆதரவு ஆகியவற்றில் தொடர்ந்து ஒத்துழைப்பைத் தொடர பிரதிநிதிகள் முடிவு செய்தனர். 26 வருட இடைவெளிக்குப் பின்னர் 2024 இல் அமைதிப் படை இலங்கைக்கு திரும்பியதை பிரதிநிதிகள் பாராட்டினர்.

அமெரிக்காவும் இலங்கையும் தங்கள் 76 ஆண்டுகால கூட்டணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு, பருவநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆளுகை மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.

உரை முடிவு.

*******************

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 ஜூலை 16

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close