டயமன்ட் ப்ரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு கப்பற்குழு உறுப்பினர்களும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர்

டயமன்ட் ப்ரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு கப்பற்குழு உறுப்பினர்களும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர்

ஜப்பானின் யோகோகாமாவில் உள்ள டயமன்ட் ப்ரின்சஸ் பிரயாணக் கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு கப்பற்குழு உறுப்பினர்கள், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்திய அரசாங்கத்தினால் புதுடெல்லிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டய விமானமொன்றின் மூலம் நேற்று இரவு (பெப்ரவரி 26) வெளியேற்றப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்த இரண்டு கப்பற்குழு உறுப்பினர்களும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கப்பல் பிரயாணத்தில் இருந்த 124 மொத்த எண்ணிக்கையிலான கப்பற்குழுவினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் இந்தியாவின் ஹரியானாவில் உள்ள ராணுவ நிலையத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு தனிமைப்படுத்தப்பட்ட காவலில் வைக்கப்படுவர்.

இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட காவல் நடைமுறையை பூர்த்தி செய்தவுடன், இலங்கையின் இரு கப்பற்குழு உறுப்பினர்களும் கொழும்புக்குத் திரும்புவர்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
27 பெப்ரவரி 2020
Please follow and like us:

Close