கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்புக்களிலிருந்து மீளுவதற்காக இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உதவி

கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்புக்களிலிருந்து மீளுவதற்காக இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உதவி

Image2

கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக, இலங்கையின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை நிவர்த்தி செய்து, தணிப்பதற்காக முக்கியமான அரச பொருளாதார முகவர் நிலையங்கள் மற்றும் தனியார் துறையினருடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மேற்கொண்ட விரிவான நடவடிக்கைகள் புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திய அதே வேளை, இலங்கையின் பாரம்பரியமான ஏற்றுமதி உற்பத்திகளின் இழந்த சந்தை வாய்ப்புக்களைத் தக்கவைத்து, மீட்டெடுப்பதற்கும் உதவியுள்ளன. 2020 ஏப்ரல் மாதத்தில் 277 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்த ஏற்றுமதிகள், மே மாதத்தில் 606 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளதுடன், மறுசீரமைக்கப்பட்ட கணிப்புக்களுக்கு அமைய, எதிர்வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கோவிட்-19 தொற்றுநோயின் பொருளாதாரத் தாக்கங்களும், இலங்கைக்கான அதன் கேள்விகளும் சவால்களும் என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடுவதற்காக 2020 ஜூன் 10ஆந் திகதி அத தெரன தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணலின் போது, வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் பிரிவின் மேலதிக செயலாளர் பி.எம். அம்சா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றுநோய் நிலைமை முதல், அதன் பாதிப்புக்களிலிருந்து மீளுவதற்காக, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் தேயிலை சபை போன்ற முகவர் நிறுவனங்களுடன் இணைந்து அமைச்சின் 'பொருளாதார இராஜதந்திரத் திட்டம்' இலங்கை ஏற்றுமதியாளர்கள் கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்புக்களிலிருந்து மீண்டு, ஏற்றுமதிகளை மேற்கொள்வது தொடர்பில் ஒரு முக்கிய வினையூக்கியாக செயற்பட்டு வருகின்றது என மேலதிக செயலாளர் தெரிவித்தார். உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் பரிமாற்றம் செய்து விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளுக்கான இடையூறுகள் உட்பட சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களின் உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக, புதிய சந்தை இலக்குகள் தோற்றுவிக்கப்பட்டு, தேயிலை, ரப்பர் மற்றும் புதிய / பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களுக்கான சந்தைகளை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் கோவிட்-19 சூழ்நிலையின் விளைவாக, குறிப்பாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரப்பர் சார்ந்த தயாரிப்புக்கள் (முகமூடிகள் - 12 சந்தைகள், பாதுகாப்பு ஆடைகள் - 17 சந்தைகள், ரப்பர் கையுறைகள் - 12, கை தொற்று நீக்கி சுத்திகரிப்பான்கள் - 12) போன்ற புதிய தயாரிப்புக்கள் மற்றும் சந்தைகளை இலக்காகக் கொள்வதற்கு இலங்கைக்கு இயலுமாக அமைந்தது. அமைச்சின் தலையீடுகளினால், இந்த சவாலான சூழ்நிலையில், 344 மெட்ரிக் டொன் மற்றும் 220 மெட்ரிக் டொன் இலங்கைத் தேயிலை முறையே துருக்கி மற்றும் எகிப்துக்கும், 30 மெட்ரிக் டொன் உறைந்த உணவுகள் ஓமானுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இலங்கையின் இணைந்த ஆடை மன்றத்தின் வேண்டுகோளின் பேரில், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை இலங்கைத் தூதரகங்களுடன் இணைந்து அமைச்சு வெற்றிகரமாக ஒருங்கிணைப்பதனால், பல நாடுகளின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வழிவகுக்கின்றது. குறிப்பிட்ட மூலப்பொருட்களுக்கான 53 சாத்தியமான விநியோகஸ்த்தர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கோவிட்-19 தொற்றுநோய் நிலைமைக்குப் பிந்தைய சூழலில், புதிய சந்தைகளை கைப்பற்றுவதற்கும், தற்போதுள்ள சந்தைகளில் தேவையை வலுப்படுத்துவதற்குமான நோக்கத்துடன் ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து அமைச்சு மேலதிகமாக 15 சாத்தியமான துறைகளை அடையாளம் கண்டுள்ளது. தற்போதைய தடைகள், சவால்கள் மற்றும் வாய்ப்புக்களை கருத்தில் கொண்டு, தேங்காய், பதப்படுத்தப்பட்ட உணவு, கடல் உணவு, சுவையூட்டிகள் மற்றும் செறிவூட்டிகள், மின்னணுவியல் மற்றும் இலத்திரணியல், பரிமாற்றம் செய்து விநியோகித்தல், அச்சிடுதல், மட்பாண்டம் மற்றும் பீங்கான், ஆயுர்வேதம் மற்றும் மூலிகைகள், ஆரோக்கியம், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் / வர்த்தக செயன்முறை நிர்வாகம், சமுத்திரம் மற்றும் கடல் பொறியியல், கட்டுமானம், படகு மற்றும் கப்பல் கட்டும் துறைகளை இலக்கு வைத்து விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்னோக்கிச் செல்லும் ஒரு சந்தர்ப்பமாக, தேவைகள் அதிகரித்துள்ள ஆயுர்வேதம் மற்றும் மூலிகை, மட்பாண்டம் மற்றும் பீங்கான், படகு மற்றும் கப்பல் கட்டுமானம், மின்னணுவியல் மற்றும் இலத்திரணியல் உள்ளிட்ட முன்னுரிமை மிகுந்த துறைகளுக்காக வெபினார்கள் மற்றும் இணையவழி பி 2 பி சந்திப்புக்கள் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் திட்டமிடப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் சரக்கு விமானங்களை தொடர்ச்சியாக இயக்கி வரும் விமான சேவைகள் சிலவற்றுள் ஒன்றான ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸூடன் இணைந்து அமைச்சு, வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் தனியார் துறை ஆகியன செயற்படுகின்றன. நாட்டிற்கு மீளத் திரும்பி வர விரும்பும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்து வருவதன் காரணமாக, பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து ஆகிய இரண்டையும் அனைத்து தரப்பினருக்கும் ஏதுவான செலவுகளில் மேற்கொள்வதற்கு வழிவகுப்பதனால் இந்த விமானங்களின் நம்பகத்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

11 ஜூன் 2020

Below is the transcript of Additional Secretary/Economic Affairs P.M. Amza, during the interview on Ada Derana on 10 June 2020

Reporter- Export sectors across the world have seen significant downturn following COVID-19 outbreak and are as yet showing very slow signs of recovery as governments have been rushing to implement the measures to stabilize the economic impact of the virus with the key focus on exports. Now in Sri Lanka, the Ministry of Foreign Relations has been instrumental in assisting in the country’s export sector in recalibrating their operations to suit the sector recording the historic decrease by 64% 277.4 Million US dollars from 772.5 million US dollars in export revenue recorded in April 2019. I’ve invited the Additional Secretary for Economic Affairs of the Foreign Ministry Ambassador P.M. Amza. Thank you very much for joining us tonight on the live discussion to talk about the exports and the intervention and what measures the Foreign Ministry will take.

Mr. P.M. Amza – Thank you, first of all for having us today and giving us the opportunity of talking to you on this very important and timely subject and in fact, the Sri Lanka Foreign Ministry, as you know, we have been working with 67 missions abroad and the High Commissions, Embassies, Consulate Generals and Deputy High Commission and we also work along with the line agencies here: namely the EDB, BOI, the Tourism Board and the Foreign Employment Bureau. So in fact traditionally we have been working through these organizations giving our Missions targets. In fact it was started in 2018 when the current Foreign Secretary became the Additional Secretary, and we have introduced the Economic Diplomacy programme where we have given the Missions the targets and also help the Missions to achieve those targets including finding resources, but when it comes to COVID-19 I think, we all even the entire world had been confused on how to deal with our economy and we, as early as late March, I remember the first communication to our Missions went out on the 30th of March Circular No. 100 asking our Missions to provide details under five categories and particularly to  the market updates in their respective accreditations and concurrent  accreditations and we were able to get 59 market reports and  altogether 59 reports were published in the EDB website for the exporters and the chambers to know, to give you a summary of that. And we had got the summary under four categories particularly as you know our main exports are in apparel and the Tea as well as  rubber products and all three  items we were finding opportunities particularly.

Reporter  - this is the post COVID time

Mr. P M Amza – In the post COVID time –in fact it started in late March and April and May and the summary has been we had demand for Tea in 24 countries, Face masks in 26 countries.  PPEs in 15 countries, Rubber gloves in 22 countries and Processed foods in 16 countries and Vegetables and Fruits in 14 countries.

Reporter – This, in the given current challenges and ongoing difficulties show that still there is demand for Sri Lankan exports and we are looking at a strategy for post COVID time also through the Foreign Ministry.

Mr. Amza - Absolutely in fact taking the example of Tea, we were able to get into the Egyptian market. I have these statistics here 220 MT of Tea and Turkey 344 MT of Tea. All those have been facilitated with the collaboration of the Tea Board whereas Tea Board was assisted by our Ministry in getting the legalization of documents. As you know we were under curfew and the Missions were also closed and we were able to diplomatically approach the Missions in Colombo from Middle East as well as Turkey. We were able to ask them to legalize the documents and apart from that we were able to help our producers particularly in the garment sector to source raw materials because we have our garment industries geared for certain products and when you immediately get orders for PPEs, we have serious problems of getting those exports done because we don’t have raw materials and we were very happy out of the 23 Missions we approached in South Asia, South East Asia and the Middle East, 16 Missions have come out with 53 contact points which helped our industry here to get the raw material and keep the export running and that might be the reason in April 2020, the exports were 277 Mn and it was shot up to 606 Mn provisional in May. I think if we continue this trend there is absolute opportunity for us to go according to the new set of targets which is …

Reporter - What is your new set of targets?

Mr Amza – New set of targets is 10.75 Billion which we reduced from the 18.5 Billion but I am sure to achieve this 10.75 Billion. We need to have 818 Mn average month. We have already gone to 606 Mn in May. I think if the trend continues there is absolute opportunity for us to reach the target which we have set up.

Reporter – But amidst this challenges, Ambassador Amza which we face currently also challenge to sustain the export industry because we face several shocks. What strategies and policies you are looking at because you overseeing this export development side also.

Mr. Amza – Thank you for the question. Apart from this traditional items we have been also now working with EDB and we have identified 15 sectors. The new sectors ranging from you know boat building, porcelain items, the BPO IT products and things like that. And we are now working with our Missions since this target has been done and we are now concentrating on 5 specific areas where we will be dealing with our Missions through webinars on 5 areas  namely boat and ship building, ceramic and porcelain sector, Ayurveda and herbal sector, electronic and electrical and coconut so that in the pipeline, out of 15 sectors that we have identified we have reason to believe that we can work with five sectors with our Missions, selected Missions not all the Missions, to introduce the new Markets to the world. I am sure we should be able to work because we have an excellent team in our Missions and they have been absolutely helpful.

Reporter – very quickly before we wrap up this discussion Ambassador Amza, of course at the end of the tunnel what we see for Sri Lanka because you say that new opportunities you are looking at and new ways this also requirement for standardization amidst a pandemic and the health guidelines of the health  authorities. What should the exporters know while the Foreign Ministry is dealing with the other issues of bringing Sri Lankan expatriates back to Sri Lanka and liaising with your Foreign Missions. This export sector is also the top priority

Mr. Amza – This is an unprecedented time for us and our Missions abroad. They have been facing new challenges which they have not faced before. And I am sure so far, my colleagues in the other sections in the Ministry they had been doing remarkable amount work in containing and bringing the Sri Lankans to Sri Lanka but my Division is dealing with exports and I am working with Export related industries and the Board of Investment and another agencies who are directly dealing with Economic Affairs. I am sure that we are a nation which has shown our resilience our number of field I am sure that this will be a difficult time if not that difficult may not be able to come out we have to be positive.

Reporter – Thank you very much, Secretary Amza who is in the Economic Affairs Division of the Foreign Ministry in Sri Lanka for joining us to talk about challenges and opportunities of Sri Lankan exports.

Please follow and like us:

Close