வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு(IOM) ஆகியவை இணைந்து நடாத்திய சீரான மற்றும் வழமையான இடம்பெயர்வு குறித்த பாதுகாப்பான உலகளாவிய ஒப்பந்தம் குறித்த துணைப் பிராந்திய ஆலோசனைகள்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு(IOM) ஆகியவை இணைந்து நடாத்திய சீரான மற்றும் வழமையான இடம்பெயர்வு குறித்த பாதுகாப்பான உலகளாவிய ஒப்பந்தம் குறித்த துணைப் பிராந்திய ஆலோசனைகள்

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) ஆகியவை இணைந்து, 2024 நவம்பர் 5 முதல் 6 வரை பங்களாதேஷ், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள், சிவில் சமூகம், பல உள்ளூர் பங்குதாரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை முகவர்கள் ஆகியோரின் பங்கேற்பில், பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் வழக்கமான இடம்பெயர்வுக்கான உலகளாவிய இணக்கம் (GCM) பற்றிய தெற்காசிய துணை பிராந்திய ஆலோசனையை நடத்தியது.

இந்நிகழ்வில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன சிறப்புரையாற்றினார்.

மாலைத்தீவுக் குடியரசின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அதி மேதகு அப்துல் மஜீத் இப்ராஹிம்; பிரதமரின் செயலாளர், பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர், திரு. எஸ். அலோகா பண்டார; இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், திரு. மார்க் அன்றே ஃப்ரான்ச்; மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தூதரகப் பணியகத்தின், தூதுவர் திருமதி கிறிஸ்டின் பி பார்கோ ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

23 நோக்கங்களை உள்ளடக்கிய, 2018 இல் பெரும்பான்மையான ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய புலம்பெயர் ஒப்பந்தமானது, இடம்பெயர்வுக்கான அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஐக்கிய நாடுகளின் அனுசரணையின் கீழ் அரசுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட முதலாவது பேச்சுவார்த்தை ஒப்பந்தமாகும்.

துணைப் பிராந்திய ஆலோசனைகளில் பங்கேற்பாளர்கள் மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தினர் - அவை, தொழிலாளர் இடம்பெயர்வு, மனித கடத்தலுக்கு எதிரான நிலைப்பாடு  மற்றும் காலநிலையால் தூண்டப்பட்ட இடப்பெயர்வு, அவர்களின் முன்னோக்குகளைப் பகிர்தல், பொதுவான சவால்கள் மற்றும் உலகலாவிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் உள்ள இடைவெளிகள் என்பனவாகும். உலகளாவிய பாதுகாப்பு ஒப்பத்தின்  நோக்கங்களுக்கு ஏற்ப பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் வழக்கமான இடம்பெயர்வுக்கான பாதைகளை மேம்படுத்துவதற்கான பிராந்திய ரீதியில் பகிரப்பட்ட முன்னுரிமைகளை அவர்கள் முன்னிலைப்படுத்தினர். இப்பேச்சுவார்த்தைகள் 2025, பெப்ரவரி 4 முதல் 6 வரை பேங்கொக்கில் நடைபெறவிருக்கும் உலகளாவிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் செயலாக்கம் குறித்த இரண்டாவது பிராந்திய மதிப்பாய்வில் விவாதிக்கப்பட வேண்டிய விளைவு ஆவணத்திற்கு வழிவகுத்தது.

வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன தனது முதன்மை உரையில், “ஒரு நாட்டின் சமூக மற்றும் மனித வளத்தளத்தை எதிர்மறையாகப் பாதிக்காத சமச்சீர் இடம்பெயர்வுக் கட்டமைப்பானது வேலையின்மையை நிவர்த்தி செய்வதற்கு பங்களிக்கவல்லதும், தெளிவானதுமான பொருளாதார மற்றும் சமூக நன்மைகளைக் கொண்டுள்ளது. தொழிலாளர் இடம்பெயர்வுக்கான நெறிப்படுத்தப்பட்ட பாதைகளை விரிவுபடுத்துவதானது, தொழிலாளர் தோற்றுவிக்கும் மற்றும் தொழிலாளரை நாடும் நாடுகளுக்கு ஒரு வெற்றிகரமான சூழ்நிலையாகும்". பேச்சுவார்த்தைகளின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ள பங்கைக் குறிப்பிட்டு, அதைத்தொடர்ந்து, உலகலாவிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட அவர், இலங்கை உலகளாவிய பாதுகாப்பு ஒப்போந்தத்தின் சிறந்த நாடாக மாறுவதற்கான தற்போதைய ஆர்வத்தை எடுத்துக்காட்டினார். 2003 இல் இலங்கையின் தலைமையில் நிறுவப்பட்ட கொழும்புச் செயல்முறை உட்பட தெற்காசியாவில் இடம்பெயர்தல் தொடர்பான பிராந்திய ஒத்துழைப்பின் பாரம்பரியத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருமானமானது, வெளிநாட்டு நாணய வருவாயின் முக்கிய தூணாக அமைந்தது என்றும், இதன் மூலம் கடந்த இருபது ஆண்டுகளில் நாட்டின் வெளிவாரியான பின்னடைவை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறக்கூடியதாய் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக இடம்பெயர்வு சூழ்நிலைகளின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பரந்த மற்றும் நெகிழ்வான தன்மையை வெளியுறவுச் செயலாளர் பாராட்டினார்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

2024 நவம்பர் 07

Please follow and like us:

Close