வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சராக விஜித ஹேரத் அவர்கள், 2024, நவம்பர் 18 ஆம் திகதியாகிய இன்று  வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சில், எளிமையானதொரு வைபவத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ஹேரத் 2000 ஆம் ஆண்டு முதல், பாராளுமன்ற உறுப்பினராக,  கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் ஹேரத், முன்னைய கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளதுடன், நடைபெற்ற தேர்தலுக்கு முன்னரான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும்  கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் விஜித ஹேரத் களனிப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டதாரியாவார்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

2024, நவம்பர் 18

 

Please follow and like us:

Close