லண்டனில் உள்ள மார்ல்பரோ மாளிகையில் உள்ள பொதுநலவாய தலைமையகத்தில் நடைபெறும் 22வது பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள்  கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்

லண்டனில் உள்ள மார்ல்பரோ மாளிகையில் உள்ள பொதுநலவாய தலைமையகத்தில் நடைபெறும் 22வது பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள்  கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்

2023 மார்ச் 15ஆந் திகதி லண்டனில் உள்ள மார்ல்பரோ மாளிகையில் உள்ள பொதுநலவாய தலைமையகத்தில் நடைபெறவுள்ள 22வது பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார். பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக, பொதுநலவாய உறுப்பு நாடுகளை ஒன்றிணைக்கும் மதிப்புக்கள் மற்றும் அபிலாஷைகளை சுட்டிக் காட்டும் பொதுநலவாய சாசனம் கைச்சாத்திடப்பட்ட 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் பொதுநலவாய தினக் கொண்டாட்டங்களில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மார்ச் 13ஆந் திகதி பங்கேற்பார். இதன்போது,  இந்த விழுமியங்களை அடையாளப்படுத்தும் 'பொதுநலவாய நாடுகளின் சமாதானக் கொடி' முன்முயற்சியை உறுப்பு நாடுகள் ஆதரிக்ளவுள்ள அதே வேளை, வருகை தரும் வெளிவிவகார அமைச்சர்களுக்கு மன்னர் சார்லஸ் III வழங்கும் வரவேற்புடன் கொண்டாட்டங்கள் நிறைவடையும்.

இந்த ஆண்டுக்கான பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டமானது, அமைதியான மற்றும் நிலையான சமூகங்களுக்கு பின்னடைவைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான காலநிலை நிதியுதவி மற்றும் பொருளாதார மீட்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்காக  பொதுநலவாய வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துதல் போன்ற பகிரப்பட்ட சவால்களுக்கு கூட்டுப் பிரதிபலிப்புக்களை கலந்துரையாடும் வகையில் வெளிவிவகார அமைச்சர்களை ஈடுபடுத்தவுள்ளது.

இந்த நிகழ்வுகளின் பக்க அம்சமாக, அமைச்சர் சப்ரி வெளிவிவகார, பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் மாண்புமிகு  ஜேம்ஸ் கிலெர்வலி சந்திக்கவுள்ளதுடன், பொதுநலவாய செயலாளர் நாயகம் மாண்புமிகு பட்ரிசியா ஸ்கொட்வேண்ட் கே.சி, இந்தோ - பசுபிக் வெளியுறவு, பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி ட்ரெவல்யன் மற்றும் இலங்கைக்கான பிரதமரின் வர்த்தகத் தூதுவரான அபர்சோக் பிரபு மெர்வின் டேவிஸ் ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். பொதுச் சபையில் மாண்புமிகு நேஸ்பி பிரபுவினால் வழங்கப்படவுள்ள பிற்பகல் தேநீர் விருந்திலும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்வுள்ள அதே வேளை, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கை தேயிலை சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் குறுக்குப் பிரிவினருக்கு பிரித்தானியாவுடனான இலங்கையின் உறவுகள் குறித்த கருத்துக்களையும் வழங்குவார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரியின் லண்டன் விஜயத்தின் போது, ருவாண்டா (அலுவலகத்தில் பொதுநலவாயத் தலைவர்), கென்யா, பாகிஸ்தான்  மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மார்ச் 12

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close