2025, செப்டம்பர் 8 திங்கட்கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உரை

 2025, செப்டம்பர் 8 திங்கட்கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உரை

மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை தூதுக்குழுவை வழிநடத்தும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையை சமர்ப்பிப்பதைத் தொடர்ந்து, சபையில் உரையாற்றவுள்ளார். மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் தொடர்ச்சியானதும், ஆக்கபூர்வமானதுமான ஈடுபாட்டிற்கமைய இவ்வறிக்கை வழங்கப்படும்.

அமைச்சரின் உரையைத் தொடர்ந்து, ஊடாடும் உரையாடலொன்று நடைபெறவுள்ளதுடன், இதன் போது உறுப்பினர் மற்றும் பார்வையாளர் நாடுகளும் உரையாடல்களில் ஈடுபடும்.

இந்த அமர்வின் போது, ​​அமைச்சர் ஏனைய நாடுகளுடனும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான  உயர் ஸ்தானிகருடனும் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (HRC) 60வது அமர்வு 2025, செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 8  வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 2025, செப்டம்பர் 08

Please follow and like us:

Close