லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான முதலாவது சபைக் கூட்டத்திற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தலைமை

லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான முதலாவது சபைக் கூட்டத்திற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தலைமை

IMG_8900

லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிர்வாக சபைக் கூட்டம் 2020 ஜூன் 9ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையின் கீழ் லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, நிறுவகத்தின் நிர்வாக சபையின் புதிய உறுப்பினர்கள், பேராசிரியர் கபில குணவர்தன, கலாநிதி ரொஹான் குணரத்ன, திருமதி. சுகந்தி கதிர்காமர், திரு. கோசல விக்ரமநாயக்க மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கணேசன் விக்னராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிநாட்டு உறவுகளின் முக்கியத்துவத்தை அமைச்சர் குணவர்தன விளக்கினார்.

1591785840027_IMG_8914 IMG_8931

Please follow and like us:

Close