Foreign Minister Gunawardena appreciates support of countries at UNHRC

Foreign Minister Gunawardena appreciates support of countries at UNHRC

Foreign Minister Dinesh Gunawardena held a media conference at the Foreign Ministry today, 23 March 2021, to brief the media on the outcome of the UNHRC sessions in Geneva. He appreciated the support extended by the countries in favour of Sri Lanka.

Video Link: https://m.youtube.com/watch?v=N1IfiA9u8Dg

------------------------------

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் மட்டுமே இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன என்பது இலங்கைக்குக் கிடைத்த வெற்றியாகும் என வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு 2021 மார்ச் 23ஆந் திகதி நடைபெற்றது.

வாக்களிப்பின் பின்னர் வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிநாட்டு அமைச்சர் உரையாற்றினார். ஆதிக்க சித்தாந்தத்தின் நாடுகள் மட்டுமே தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன என அமைச்சர் சுட்டிக்காட்டினார். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளைத் தனிமைப்படுத்தி அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்வது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு எதிரானது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுப்பதற்காக பெரும்பான்மையுடன் மக்கள் வாக்களித்துள்ளதுடன், பின்னர் அவர் வலுவான அரசாங்கத்தை அமைப்பதற்காகவும் பெரும்பான்மை ஆதரவுடன் வாக்களித்தனர். ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முந்தைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி, எமது நாட்டை ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளியது. 2019ல் எமது அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர், நாங்கள் 43வது மனித உரிமைகள் பேரவையில் பங்கேற்று அந்த இணை அனுசரணையிலிருந்து விலகினோம். அங்கு, எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு நாங்கள் கட்டுப்படுவோம் எனக் குறிப்பிட்டோம். நாங்கள் அன்றிலிருந்து அதற்கேற்ப செயற்பட்டு வருகின்றோம். இன்று உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பூசியினைப் பெற்றுக் கொள்ள இயலாமையால் துன்பத்தில் உள்ளன. அத்தகைய நேரத்தில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முதன்மைப் பொறுப்பு, கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களை உயிருடன் வைத்திருப்பதாகும். இதை நாங்கள் மாநாட்டில் கூறியுள்ளோம். எங்களுக்கு எதிரான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் ஆதாரமற்ற புள்ளிவிவரங்கள் மற்றும் தவறான தகவல்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி, அந்த அறிக்கையை நாங்கள் முற்றிலுமாக நிராகரித்தோம். தீர்மானத்தை எதிர்ப்பதற்காக மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்தோம். மனித உரிமைகள் பேரவை ஐ.நா. சாசனத்திற்கு மாறாக செயற்பட முடியாது. மனித உரிமைகள் பேரவையை நிறுவுவதற்கான உண்மையான பிரேரணைக்கு மாறாக அவர்களால் செயற்பட முடியாது. ஐ.நா. சாசனத்தின்படி, அவர்கள் விரும்பியபடி தனிப்பட்ட நாடுகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. அந்த அடிப்படைக் கொள்கைக்கு மாறாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் மட்டுமே பிரித்தானியா, ஜேர்மனி, கனடா மற்றும் பல நாடுகளால் கொண்டுவரப்பட்ட எமது நாட்டிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இதனால், அவர்கள் பெரும்பான்மையை இழந்துள்ளனர். இது தெற்கு அல்லது காலனித்துவ நாடுகளிடமிருந்து கடுமையாக வெற்றி கொண்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி வடக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பமாகும். குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், எமது அரசாங்கம் மற்றும் நாட்டை நேசிக்கும் முக்கியமானவர்கள் ஒன்று கூடி இதை உலகிற்கு உணர்த்தியுள்ளனர். கோவிட் தொற்றுநோயால் இந்த மாநாட்டில் நாங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மெய்நிகர் மாநாடுகளை நடாத்தி, எம்மைப் போன்ற நாடுகளில் செல்வாக்குச் செலுத்திய போதிலும், எம் நாட்டின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கும், எங்களுக்கு எதிரான தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் அப்போது வாக்குறுதியளித்தபடி, மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது, அதன் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த 2030 நிலையான அபிவிருத்தித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக நாங்கள் பணியாற்றி வருகின்றோம். எமது நாட்டில் வசிக்கும் எந்த சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம்களும் பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை நுனி வரை எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம், வாழலாம், குடியேறலாம். இன்று, விடுதலைப் புலிகளினால் அழிக்கப்பட்ட சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் நாடாக எமது நாடு மாற்றப்பட்டுள்ளது. இந்த நேர்மறையான விடயங்களைத் தவிர்த்து, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளால் எங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை, ஆனால் 22 வாக்குகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும், தீர்மானத்திற்கு எதிராக 11 வாக்குகள் பதிவாகியுள்ளன. பிரித்தானியாவின் தீர்மானங்களில் வாக்களிப்பதில் இருந்து 14 நாடுகள் விலகியுள்ளன. அதன்படி, 47 நாடுகளில் 25 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு உடன்படவில்லை. அது மிகவும் முக்கியமானதாகும் என வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close