வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, “LKI - லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின்  வெளிநாட்டு  கொள்கை மாநாட்டில் “,  அரச கொள்கை வகுப்பிற்கான வழிகாட்டலுக்கு தரவு அடிப்படையிலான ஆராய்ச்சியின் அவசியத்தை கோடிட்டுக்காட்டுகிறார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, “LKI – லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின்  வெளிநாட்டு  கொள்கை மாநாட்டில் “,  அரச கொள்கை வகுப்பிற்கான வழிகாட்டலுக்கு தரவு அடிப்படையிலான ஆராய்ச்சியின் அவசியத்தை கோடிட்டுக்காட்டுகிறார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம்.  அலி சப்ரி அரச கொள்கை வகுப்பிற்கான வழிகாட்டலுக்கு தரவு அடிப்படையிலான ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டியதுடன், அவ்வாறான செயற்பாடு, குறிப்பாக, பொருளாதாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு இருந்தால், இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார். அமைச்சர் ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல், உரிய பத்திரங்களை சமர்ப்பித்தல், திறந்த மற்றும் மூடப்பட்ட வாயில்களுக்குள் விவாதித்தல் போன்றவற்றின் மூலம் சிறந்த தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்கான முக்கியத்துவத்தினை எடுத்துக்கூறினார்.

வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் மூலோபாய கல்விக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தினது, 2023  ஆகஸ்ட் 09 அன்று லைட் ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்ற காலாண்டு விழாவில், அமைச்சர் நிகழ்த்திய தொடக்க உரையின் போது இவ்விடயத்தினை பதிவு செய்திருந்தார். இத்தொடக்க விழாவானது, 2023 ஆகஸ்ட் 12 அன்று நிகழவிருக்கும் காலஞ்சென்ற கௌரவ அமைச்சர் திரு. லக்ஷ்மன் கதிர்காமரின் 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒத்ததாய் அமைந்திருந்தது. இந்நிகழ்விற்கு வெளிநாட்டு அலுவல்களுக்கான இராஜாங்க அமைச்சர் திரு.தாரக பாலசூரிய, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கான பதில் செயலாளர் யு.எல்.எம் ஜவுகர், இராஜதந்திர தூதர் பணியக தலைவர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், அரச அதிகாரிகள், கல்விமான்கள், தொழில் முயற்சியாளர்கள் , சிவில் சமூகம், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் போன்ற பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.

 படுகொலை செய்யப்பட்ட, காலஞ்சென்ற முன்னாள் வெளிநாட்டுத்துறை அமைச்சர் கெளரவ திரு லக்ஷ்மன் கதிர்காமர் நாட்டிற்கு ஆற்றிய சேவையை கெளரவிக்குமுகமாக, அமைச்சரினால் 2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட " இலங்கை மூலோபாய கல்வி நிறுவனம்" , 2006 இல் “LKI- லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மறைந்த அமைச்சர் கெளரவ திரு லக்ஷ்மன் கதிர்காமரின்  புகழானது, LKI- லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் மூலம் இன்றும் நிலைத்திருப்பதுடன், அவரை நினைவு  கூறுவதோடு, அவரைப்போன்றே விடாமுயற்சி, உற்சாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் கடமை புரிவது முக்கிமானது  எனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.  அமைச்சர் LKI நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் துல்லியம் , சுயாதீனத்துவம் , நடுநிலையான தன்மை போன்றவற்றில் உயர் தரத்தினைக் கொண்டிருக்கவேண்டுமென வலியுறுத்தியதுடன், LKI நிறுவனத்தின் தனிச்சிறப்பானது சுயாதீனமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், அதன் மூலம் நம்பகத்தன்மை பேணப்படுவதிலும் தங்கியுள்ளதேனவும் குறிப்பிட்டிருந்தார். LKI- வெளிநாட்டு கொள்கை மாநாடானது கலந்துரையாடல், பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு போன்றவற்றிற்கான தளமொன்றை அமைத்துக்கொடுக்குமெனவும், அதன்மூலம், உரிய காரணிகளின் இடைத்தொடர்புகள் வலுவூட்டப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பான அவருடைய கருத்தில், தேர்ந்தெடுக்கப்படும் தலைப்புக்கள் சமகாலத்திற்கு பொருத்தப்பாடுடையதாக இருப்பதன் மூலம் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள்,  கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு பரிந்துரைகளை வழங்க உதவியாய் அமையுமென குறிப்பிட்டிருந்தார்.

வரவேற்புரை நிகழ்த்திய நிறைவேற்று பணிப்பாளரும், தூதுவருமான ரவினாத ஆர்யசிங்ஹ, துரிதமாக மாறும் உலகில் உருவாகிக்கொண்டிருக்கும் புதிய தளமானது, பொதுவான பின்னணியொன்றை கட்டியெழுப்புவதோடு, இடர்பாடுகள் மீதான இலங்கையின் கண்ணோட்டம் மேம்படவும் வழிகோலும் எனவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு காலப்பகுதியிலும் LKI இனால் மேற்கொள்ளப்படும் முக்கிய செயற்றிட்டங்களுக்கு மேலதிகமாக, பூகோள நிர்வாகம், பூகோள பொருளாதாரம், பூகோள சமாதானம் மற்றும் பாதுகாப்பு, பூகோள இடைத்தொடர்புகள் போன்ற முக்கியமான 4 தூண்களை அடிப்படையாக கொண்ட விரிவான "LKI ஆய்வுத்திட்டம்", ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும் LKI இன் வதிவிட ஆராய்ச்சியாளர்களுக்கு மேலதிகமாக, நாட்டிற்கும், பூகோள சமூகத்திற்கும், சிறந்த சேவையாற்றக்கூடிய மூலோபாய பரிணமித்தலுக்கு வழிகோலும் வெளிநாட்டு கொள்கை மேம்பாடு, சமூக விழிப்புணர்வு பிரசங்க செயற்பாடுகள் என்பவற்றிற்கான வலையமைப்பொன்றை கட்டியெழுப்புமுகமாக, அதற்கான கல்விமான்கள் மற்றும் நிபுணர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், முன்னால் வெளிநாட்டு செயலாளரும் தூதுவருமான எச்.எம்.ஜி.எஸ். பலிஹக்கார, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்(KDU)  மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் மூலோபாய மதிப்பீடுகள் நிலைய பணிப்பாளர் டாக்டர். ஹரிந்த விதானகே, கொள்கை வகுப்பு கல்வி (IPS) நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் டாக்டர். துஷினி வீரகோன், இலங்கை- தேசிய சமாதான சபை (NPC) நிறைவேற்று பணிப்பாளர் டாக்டர் ஜெஹான் பெரேரா போன்ற புகழ் பெற்ற நபர்களை உள்ளடக்கிய குழுவானது, “மாறும் பூகோள இயக்கவியல்: இலங்கை மீதான தாக்கங்கள்" (The Changing Global Dynamics: Implications for Sri-Lanka ) எனும் கருப்பொருள் தொடர்பான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டது. அமர்வை வழிநடத்தி சென்ற தூதுவர் ஆரியசிங்ஹ, சமகால பூகோளத்தின் கிரமமான மாற்றங்களுடனான இயக்கவியல் தொடர்பை பற்றி குறிப்பிட்டிருந்ததோடு, குழுவானது வெளிநாட்டு கொள்கை, மூலோபாய பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சிவில் சமூக கண்ணோட்டமாகியவை இலங்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் பகுப்பாய்வு செய்தது. அதனைத்தொடர்ந்து உத்வேகமான வினாவிடைத்தொகுப்பு ஒன்றும் இடம்பெற்றது.

தேசிய தொடர்புகள் மற்றும் மூலோபாயத்தொடர்புகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனம்

10 ஆகஸ்ட் 2023

..............................................

..............................................

Please follow and like us:

Close