வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவிற்கு விஜயம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவிற்கு விஜயம்

சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின் அழைப்பின் பேரில் 2023 ஜனவரி 23 - 27 வரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் பர்ஹான் அல் சவுத்தை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடவுள்ளார். இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, வளைகுடா ஒத்துழைப்பு பேரவை மற்றும் மக்கா மற்றும் மதீனா ஆளுநர்களையும் அமைச்சர் சந்திக்கவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2023 ஜனவரி 21

Please follow and like us:

Close