கடந்த வெள்ளிக்கிழமை ஹங்கேரி வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சர் பீட்டர் சிஜ்ஜாடோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்தரையாடலுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்கள் புடாபெஸ்ட் சென்றிருந்தார். ஹஹ்கேரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் சிஜ்ஜாடோவின் அழைப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயமானது இலங்கை மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை தாபித்து அறுபது வருட ஆண்டு நிறைவுடன் இசைந்திருந்தது (1959 பெப்ரவரி முதல்).
கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுடன் இலங்கையின் இருதரப்பு கலந்தரையாடல்களை ஆழமாக மேற்கொள்வதற்கான இலங்கையின் ஆர்வத்தை வலியுறுத்திய அமைச்சர் மாரபன அவர்கள், ஹங்கேரி குடியரசுடன் ஒரு பரந்த கொள்கைளின் அடிப்படையில் ஒத்துழைப்பை முன்னெடுத்தல் இந்த முயற்சியின் முக்கிய அம்சமாகும் என்பதுடன் 2017 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய இலங்கை-ஹங்கேரி இணை ஆணைக்குழு கட்டமைப்பு மற்றும் நிதிசார் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு நிகழ்ச்சிநிரல் தாபிப்பதற்கான உடன்படிக்கை ஆகியவற்றுக்கு அமைவாக இருதரப்பு பொருளாதார மற்றும் நிதிசார் ஒத்துழைப்பானது ஏற்கனவே வலுவாக இருந்தாகவும் அவர் தெரிவித்தார். 2019 மார்ச் மாதத்தில் இடம்பெற்ற இணை ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வினை தொடர்ந்து இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொண்ட ஒத்துழைப்பு விடயப்பரப்புக்களாவன கமத்தொழில் மற்றும் உணவு பொருளாதாரம், சிறிய நடுத்தர தொழில்முயற்சிகள் அபிவிருத்தி, நீர் முகாமைத்துவம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் அனர்த்த முகாமைத்துவம், சுற்றுலாத்துறை மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. அநேகமான இந்த விடயப்பரப்புக்களின் கீழ் அரச-தனியார் பங்குடைமைகளுக்கான உறுதியான பிரேரணைகள் இனங்காணப்பட்டுள்ளன. ஹங்கேரியின் உதவிக்கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் நான்கு கருத்திட்டங்களின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் இரண்டு அமைச்சர்களும் மீளாய்வு செய்தனர். இந்த கருத்திட்டங்களாவன பிங்கிரிய-உடுபெட்தாவ நீர் விநியோக கருத்திட்டம்(53மில்லியன் யூரோ), கொவ்வல மற்றும் கெடம்ப- மேம்பாலம் நிர்மாணம் ( 52 மில்லியன் யூரோ), 148 புகையிரதப்பாதை பாதுகாப்பு கடவைகள் (12மில்லியன் யூரோ), மற்றும் இலத்திரணியல் நீதிமன்ற முகாமைத்துவ முறைமை (32 மில்லியன் யூரோ), ஆகியவை ஆகும். லபுகம நீர் சுத்திகரிப்பு புணர்நிர்மாணம்(22.5 மில்லியன் ஐ.அ டொலர்) மற்றும் கலதுவாவ நீர் சுத்திகரிப்பு புணர்நிர்மாணம் (23.4 மில்லியன் ஐ.அ டொலர்) ஆகியவை 2017ஆம் ஆண்டில் முறையே நிறைவேற்றப்பட்டன.
உயிர்த ஞாயிறு தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்காக வழங்கிய 20 மில்லியன் எச்.யூ.எப் (65000 யூரோ) துரித மனிதாபிமான உதவிகளுக்காக அமைச்சர் திலக் மாரபன அவர்கள் அரசாங்கத்திற்கும் (11 மில்லியன் எச்.யூ.எப்.) மற்றும் ஹங்கேரி மக்களுக்கும் (9மில்லியன் எச்.யூ.எப்) நன்றியை தெரிவித்தார். தேசிய நல்லிணக்கம், நல்லாட்சி, மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சியில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் சிஜ்ஜாடோவிற்கு அவர் விளக்கிக் கூறினார். இந்த நிலைமாற்று செயற்பாட்டில் இலங்கையானது தொடர்ந்தும் முகம்கொடுத்துவரும் சாவால்களையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு மறுமொழியளித்த ஹங்கேரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் சிஜ்ஜாடோ அவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட அதற்கு பின்னர் இலங்கைளில் இடம்பெற்றுவரும் நேர்மறையான முன்னேற்றங்களை பாராட்டியதுடன், இலங்கையானது அதன் அர்ப்பணிப்புப் பாதையில் முகங்கொடுத்துள்ள சிரமங்களை ஹங்கேரி நன்கு அறிந்துள்ளதுடன், நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச சமுதாயத்தை அணுகல் ஆகியவற்றிக்கு அவரது அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பையும் உறுதிசெய்தார்.
இந்த விஜயத்தின் போது, அமைச்சர் மாரபன அவர்கள் ஹங்கேரி தேசிய அசெம்பிளியின் பிரதி சபாநாயகர் ஸ்ட்வன் ஜேகொப் அவர்களை 2018 ஆம் ஆண்டில் அசெம்பிளியில் தாபிக்கப்பட்ட ஹங்கேரி-ஸ்ரீலங்கா நட்புக்குழுவின் பிரகாரம் சந்தித்தார். மேலும், பாதிக்கப்பட்ட இலங்கைக்கான துரித நிதியுதவியை ஹங்கேரி கத்தோலிக்க நலன்விரும்பிகளிடம் இருந்து ஒருங்கிணைத்தமைக்காக சம்பாத்தலி மறைவாவட்ட பேராயர் கலாநிதி அன்ராஸ் அவர்களை நேரடியாக சந்தித்து நன்றியையும் அவர் தெரிவித்துக்கொண்டார். அமைச்சர் மாரபன அவர்கள் ஹங்கேரி கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இடம்பெறும் நான்கு அபிவிருத்தி கருத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹங்கேரி கம்பனிகளின் பிரதம உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் அமர்வொன்றையும் மேற்கொண்டார். இருதரப்பு விஜயத்தின் ஒரு பகுதியாக காளான் வளர்ப்பு மற்றும் சேர்பெறுமதியில் விசேட கவனத்தை செலுத்தும் பையோ பங்கி அக்ரோ உணவு நிலையத்திற்கும் ஒரு பரிச்சய-விஜயமொன்று உள்ளடக்கப்பட்டது. இலங்கையில் அத்தகைய முன்னோடி கருத்திட்டம் ஒன்றை இலங்கையில் தாபித்தல் தொடர்பிலும் பொது முகாமையாளர் ஆர்பெட் மஸ்டியுடன் கலந்துரையாடப்பட்டது.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்திலும் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் இலங்கையின் இடைத் தூதுவர் இரோசா குரே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்மிக சமரசிங்க ஆகியோரும் இணைந்திருந்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2019 ஜூன் 19