மஜூரான் சதானந்தன் எதிர் பிரிகேடியர் ஆண்டிகே பிரியங்க இந்துனில் பெர்னாண்டோ வழக்கு மீதான விசாரணை 2019 அக்டோபர் 18 ஆந் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. வழக்கு விசாரணையின் போது, அரச தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களுடன், தனியார் அரச தரப்பு வழக்கை நீதிமன்றம் கேட்டது. இந்த நாளுக்கான வழக்கு அமர்வின் நிறைவில், நீதிமன்றத்தினால் எதிர்த் தரப்பு வழக்கு விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்தை தலைமை நீதிபதி 2019 நவம்பர் 19 ஆந் திகதி வரை ஒத்திவைத்தார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தின் ஆரம்ப அமர்வு நீதிபதிகளால் 2019 ஜனவரி 21ஆந் திகதி வழங்கப்பட்ட பிடியாணையை, தொடர் நடைமுறைக் குறைபாடுகளை மீண்டும் சுட்டிக்காட்டி, வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 2019 பிப்ரவரி 01ஆந் திகதி திரும்பப் பெற்றார்.
வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம் பிரிகேடியர் பெர்னாண்டோ மீதான குற்றத்தீர்ப்பு குறித்த இங்கிலாந்தின் பொது ஒழுங்கு சட்டத்தின் 4 மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட முந்தைய குற்றத்தீர்ப்பை 2019 மார்ச் 15 ஆந் திகதி நீக்கியதுடன், ‘பிரதிவாதி பிரதிநிதித்துவம் இல்லாமல் தண்டிக்கப்பட்டார்’ என்று தீர்மானித்து, ‘நடைமுறை நியாயத்திற்கு வழிவகுத்த தொடர் தவறுகள் அல்லது பிழைகளை’ மேற்கோள் காட்டி, 1980 ஆம் ஆண்டின் நீதவான் நீதிமன்றச் சட்டத்தின் 142 ஆம் பிரிவின் கீழ் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு விடுத்தது.
லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைக்கப்பட்ட ஒரு இராஜதந்திரி என்ற வகையில் பிரிகேடியர் பெர்னாண்டோ 1961 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சாசனத்தின் படி இராஜதந்திர விடுபாட்டுரிமைகளுக்கு தகுதியுடையவர் என்று இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தெரிவித்தது. பரஸ்பரமான இந்தக் கடமையை மதிக்குமாறு இங்கிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
19 அக்டோபர் 2019