ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
ஐரோப்பாவிலுள்ள நாடுகள் (ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவம் கொண்ட மற்றும் அங்கத்துவமல்லாத நாடுகள்), மத்திய ஆசியா மற்றும் பொதுநலவாய சுதந்திர நாடுகளுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளை ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிரிவு கையாளுகின்றது.
இந்த நாடுகள் ஒஸ்ட்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பேர்க், மோல்டா, நெதர்லாந்து, போலாந்து, போர்த்துக்கல், ரோமானியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன் மற்றும் ஐக்கிய இராச்சியம் (28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்), மற்றும் அல்பேனியா, அன்டோரா, பொஸ்னியா மற்றும் ஹேர்சகோவ்னியா, ஜோர்ஜியா, ஹொலி சீ, ஐஸ்லாந்து, லியச்டென்ஸ்டைன், மசிடோனியா, மொல்டோவா, மொனாகோ, மொன்டிநீக்ரோ, நோர்வே, சேர்பியா, சென் மரினோ, சுவிட்சர்லாந்து, துருக்கி மற்றும் உக்ரைன் (ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவமல்லாத நாடுகள்) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பொதுநலவாய சுதந்திர நாடுகள் மற்றும் ஏனைய நாடுகள் ரஷ்ய ஒன்றியம், பெலாரஸ், கிர்கிஸ்தான், ஆர்மேனியா, அசர்பைஜான், கஸகஸ்தான், தஜிகிஸ்தான், துர்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.
இலங்கையின் இருதரப்பு உறவுகளை இந்தப் பிராந்தியத்தில் மேம்படுத்துவதற்காக, இலங்கையின் 14 வதிவிடத் தூதரகங்கள் மற்றும் 2 உதவித் தூதரகங்கள் வாயிலாகவும், ஏதேனும் வதிவிடத் தூதரகங்களற்ற இராஜதந்திர நியமனங்களை மேற்கொள்ளும் நாடுகளுடனும் இணைந்து நெருக்கமான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன