குவைத்தில் உள்ள தூதரகம் இலங்கை சமூகத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

குவைத்தில் உள்ள தூதரகம் இலங்கை சமூகத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

விழாக்களைக் குறிக்கும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வோடு, குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் குவைத்தில் உள்ள இலங்கை சமூகத்தினருடன் இணைந்து 2022 டிசம்பர் 22ஆந் திகதி தூதரக வளாகத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வைக் கொண்டாடியது. இந்நிகழ்வில் தூதுவர், தூதரக ஊழியர்கள் மற்றும் அனைத்து மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த சமூக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

வணக்கத்திற்குரிய தந்தை இவான் பெரேரா அவர்கள் நத்தார் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு, கிறிஸ்மஸின் பொருத்தத்தை வலியுறுத்தியதுடன், உலகில் உண்மையான மற்றும் நிலையான அமைதியை அடைவதற்கு அன்பும் இரக்கமும் முக்கியம் எனக் குறிப்பிட்டார். எதிர்வரும் மகிழ்ச்சியான மற்றும் வளமான ஆண்டிற்காக அனைத்து இலங்கையர்களுக்கும் அவர் தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் முத்து ஹன்ச நடன அகடமியின் மாணவர்களின் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளால் பாடப்பட்ட கரோல் பாடல்கள், நிகழ்வை கொண்டாட்டமாக மாற்றியது. குழந்தைகளுக்கான பரிசுகளை ஏற்றிய கிறிஸ்மஸ் தாத்தாவின் வருகை மாலை நிகழ்வின் சிறப்பம்சமாக இருந்தது. விருந்தினர்களுக்கு ஆடம்பரமான கிறிஸ்மஸ் இரவு விருந்தும் வழங்கப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

குவைத்

2022 டிசம்பர் 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close