வியன்னாவில் " தூதரகக் கோப்பை" கிரிக்கெட் போட்டி தொடர்ச்சியான 3 ஆவது ஆண்டில் நடைபெற்றமை

வியன்னாவில் ” தூதரகக் கோப்பை” கிரிக்கெட் போட்டி தொடர்ச்சியான 3 ஆவது ஆண்டில் நடைபெற்றமை

இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தர தூதர் பணியகம் மற்றும்ஆஸ்திரியாவில் உள்ள பங்களாதேஷின் தூதரகம் மற்றும் நிரந்தர தூதர் பணியகம் ஆகியவை  ஒருங்கிணைந்து, தொடர்ச்சியான 3 ஆவது ஆண்டில், ஏற்பாடு செய்திருந்த "தூதரக கோப்பை" போட்டிகள், வியன்னா ஆஸ்திரியாவில் உள்ள, De La Salle Sportzentrum இல், நடைபெற்றது.

வியன்னாவை தளமாகக் கொண்ட பங்களாதேஷ், இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் எட்டு தூதரகங்கள், தங்களின் அணிகளை போட்டியில் சேர்த்தன. ஆஸ்திரிய கிரிக்கெட் சங்கம் இப்போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ அனுசரணையை வழங்கி ஆதரித்தது.

இறுதிப் போட்டியில் இந்தியத் தூதரகத்துக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து, பங்களாதேஷ் தூதரகம் தொடர்ந்து இரண்டாவது முறையாக, தூதரக கோப்பையை வென்றது.

இப்போட்டிகளுக்கு மேலதிகமாக, தூதர்கள் மற்றும் பெண்களுக்கான நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெற்ற பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

மைதானம் சுற்றுலா விளம்பர பதாகைகள், கொடிகள் மற்றும் பின்னணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கை தனது பெயரை அடையாளப்படுத்திக்கொள்ளவும், இணைந்துக்கொண்ட சகல நாடுகளுக்கு மத்தியிலும், முன்னணி சுற்றுலாத்தளமாக தன்னை காட்சிப்படுத்திக்கொள்ள ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது.

உலகின் தனிச்சிறப்பு வாய்ந்த,  "சிலோன் தேநீர்"உடன், இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளை, வருகை தந்திருந்த விருந்தினர்கள் சுவைத்தனர்.

இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தர தூதரகம்

வியன்னா

 

11 செப்டம்பர் 2023

Please follow and like us:

Close