வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இலங்கைக்கான எகிப்தியத் தூதுவர் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இலங்கைக்கான எகிப்தியத் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான எகிப்தியத் தூதுவர் மகேத் மொஸ்லே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022  ஆகஸ்ட் 31ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி மற்றும் தூதுவர் மொஸ்லே ஆகியோர் பல்வகைப்படுத்தப்பட்ட இருதரப்பு  ஒத்துழைப்பு குறித்த பரந்த அளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

தற்போதைய முன்னேற்றங்கள், நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக  அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதுவர் மொஸ்லேவிற்கு அமைச்சர் சப்ரி விளக்கமளித்தார்.

தற்போதைய உலக முன்னேற்றங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்தும்  இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65வது ஆண்டு நிறைவு விழா  அடுத்த வருடம் பொருத்தமான முறையில் கொண்டாடப்படும் என இதன்போது மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 செப்டம்பர் 01

Please follow and like us:

Close