இலங்கையின் வெளிநாட்டு கொள்கை மற்றும் பொருளாதார இராஜதந்திர கலந்துரையாடலில் 23 நாடுகளைச் சேர்ந்த  இராஜதந்திரிகள் பங்கேற்கின்றனர்.

இலங்கையின் வெளிநாட்டு கொள்கை மற்றும் பொருளாதார இராஜதந்திர கலந்துரையாடலில் 23 நாடுகளைச் சேர்ந்த  இராஜதந்திரிகள் பங்கேற்கின்றனர்.

 4

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் ஒழுங்கமைக்கப்பட்ட இலங்கை வெளிநாட்டு கொள்கை மற்றும் பொருளாதார இராஜதந்திர கலந்துரையாடலானது ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தின் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரலேசியாவைச் சேர்ந்த 23 நாடுகளின்  மத்திய-தொழில்சார் இராஜதந்திரிகளின் பங்கேற்புடன்   திங்கட்கிழமை (ஒக்டோபர் 15) ஆரம்பமானது.

இந்த இரண்டு வாரகால நிகழ்ச்சித்திட்டமானது வெளிநாட்டு அமைச்சின்  பொருளாதார இராஜதந்திர நிகழ்ச்சித்திட்டத்தின் பாகமொன்றாக இடம்பெறுகின்றது. மேலும் இலங்கையின் சர்வதேச அடையாளங்கள், தொழில்முயற்சி மற்றும்  முக்கியமான துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கள் ஆகியவற்றையும் காட்சிப்படுத்துவதுடன் இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாகவும், வர்தக மற்றும் முதலீட்டு மற்றும் சுற்றுலா மையமாகவும் அடைந்துள்ள அதன் வளர்ச்சியில் விசேட கவனம் செலுத்துவதுடன் இலங்கைப் பொருளாதாரத்தில் முதன்மையான கவனத்தை செலுத்தும். இந்த கலந்துரையாடலானது, இலங்கையின் செழிப்பான வரலாறு மற்றும் கலாசாரம்,  சர்வதேச அரசியல் பற்றிய நிலைமைகள் மற்றும் கருப்பொருள் பிரச்சினைகள்-நல்லாட்சி, நிலைபேறான அபிவிருத்தி, மற்றும் தகவல் உரிமை, சமூக ஊடகம் மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியன உள்ளிட்ட வெளிநாட்டு கொள்கை அம்சங்கள் ஆகியவற்றையும் ஆய்வுசெய்யும். இலங்கையின் முக்கியமான அரசாங்க உத்தியோகத்தர்கள், கல்வியியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் வர்த்தக தலைவர்கள்  இந்த கலந்துரையாடலில் பங்கேற்பர் என்பதுடன் அதனைத் தொடர்ந்து 3 நாள் கள விஜயம் தொடரும்.

அமர்வின் ஆரம்பத்தில் பங்கேற்பாளர்கள் வெளிநாட்டு அமைச்சரை சந்தித்தனர். அவர் அவர்களை வரவேற்றதுடன்  இலங்கையில் அவர்களது தங்குதல் காலம் உற்பத்தித்திறன் மிக்கதாகவும் சுவாரஸ்யமாகவும் அமையவேண்டும் என்று வாழ்த்தினார்.

கலந்துரையாடலில் பங்கேற்ற இராஜாங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வசந்த சேனாநாயக அவர்கள், இலங்கையானது பல்வகையான கலாசாரம், இனங்கள் மற்றும் பல்வேறு சமயங்களையும் கொண்ட நாடாக உள்ளதுடன் அதன் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த பூகோள அமைவிடமானது இலங்கையை ஆதிகாலத்தில் இருந்தே தனித்துவமான சர்வதேச அமைவிடமாக மாற்றியுள்ளது என்று கூறினார். இலங்கையின் வெளிநாட்டு பயணப்பாதை மற்றும் வரலாற்றுப்பாதையில் இலங்கையானது முகங்கொடுத்துள்ள சவால்களையும் கோடிட்டுக்காட்டிய அவர் இலங்கையானது சர்வதேச உறவுகளுக்கான அறிவு மையமாக அமைந்துள்ளதென்றும் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்  அவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின்போதும் இலங்கை பங்கேற்பாளர்கள் மத்தியிலும் உரையாற்றிய அவர்,  எதிர்கால போக்குகள் தொடர்பில் எதிர்பார்க்குமாறும் அவற்றை பிராந்திய ரீதியில் மற்றும் உலகளாவிய ரீதியில் எல்வாறு கையாள்வதென்று இணைந்து எதிர்நோக்குமாறும் விஜயம் மேற்கொண்டுள்ள இராஜதந்திரிகளை ஊக்குவித்தார்.

இராஜதந்திரிகளின் விஜயமானது, இலங்கை உறவுகள் மீது அவர்களின் அரசாங்கங்கள் வைத்துள்ள முக்கியத்துவத்தின் வெளிப்பாட்டை பிரிதிபலிப்பதாக அவர்கள் மத்தியில் உரையாற்றிய பதில்கடமையாற்றும்  வெளிநாட்டுச் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார். இலங்கையானது  பல்வேறு அரசியல்-பொருளாதார மற்றும் சமூக சவால்களை எவ்வாறு சமாளிக்கின்றது என்பதை மாத்திரம்  இந்த கலந்துரையாடல் ஊடாக  அவர்களுக்கு தெரிவித்துக்கொள்ளாது மாறாக  அவர்களின் சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் இவ்விடயங்கள் தொடர்பில்  கொண்டுள்ள கண்னோட்டங்களையும் அறிந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார். இந்நாடுகள் தமது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திககொள்ள விரும்புவதால் இலங்கையுடன் தொழில்சார் மற்றும் பிரத்தியேக முறையில் தொடர்பை பேணுதலானது  எமது தூதரகங்கள் அல்லது அவர்களின் தலைநகரில் அமைந்துள்ள  தூதரகங்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பெரும் ஆதாரவாக இருக்கும்.

பொருளாதார இராஜதந்திர நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு இலக்குச் சந்தைக்குள்ளும் இடம்பெற்றுள்ள சமீபத்திய பொருளாதார ஓட்டங்கள் மற்றும் சாத்தியங்கள் பற்றிய போக்கை பகுப்பாய்வு செய்த வெளிநாட்டு அமைச்சானது ஏற்றுமதி, முதலீடு, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் ஒவ்வொரு தூதரகமும் அடையவேண்டிய குறிப்பிடப்பட்ட செயலாற்று இலக்குகளை வடிவமைத்துள்ளது. அத்துடன் இலங்கையின் உலகலாவிய தடத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கைக்கு உறுதியான பொருளாதார நன்மைகளை கொண்டுவரக்கூடியவாறு இலக்கு  பிரசாரங்களை மேற்கொள்வததற்கு ஆதரவளிக்கும் வகையிலும்  சம்பந்தப்பட்ட நிரல் அமைச்சுகள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் வளர்ந்துவரும் சந்தைகளில் அமைந்துள்ள வெளிநாட்டிலுள்ள 10 இலங்கை தூதரகங்களுக்கு ஒத்தாசைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்ப உற்பத்திகள் மற்றும் சேவைகள் மற்றும் சேதன உணவு உற்பத்திப்பொருட்கள் ஆகியவற்றை சுவீடனிலும், ஆடை,  துணிவகைகள் மற்றும் பாதணிகள் ஆகியவற்றை தென் ஆபிரிக்காவிலும், புதிய மற்றும் பதனிடப்பட்ட உணவை பஹ்ரைனிலும் மற்றும் மாணிக்கம் மற்றும் ஆபரணங்களை துருக்கியிலும், மசாலா மற்றும் ஆடைகளை பிரேசிலும், உடல்நல சுற்றுலாவை ஜக்கிய அரபு இராச்சியத்திலும், கொரியக் குடியரசு மற்றும் ஜப்பானிலிருந்து உள்ளக முதலீடுகளையும், மியன்மார் மற்றும் நேபாலத்திலிருந்து வெளியக முதலீடுகளையும் மேம்படுத்தும் வகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க செயலாளர் கிரேஸ் ஆசிர்வாதம் மற்றும் மேலதிக செயலாளர் - இருதரப்பு உறவுகள் சுமித் நாகந்தல ஆகியோர் அங்குரார்ப்பன நிகழ்வில் சம்பந்தப்பட்டனர். இந்த நிகழ்ச்சித்திட்டமானது பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகம் ஆகியவற்றில் நடாத்தப்படுகின்றது.  லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  கலாநிதி கனேசன் விக்னராஜா அவர்கள் “வளர்ச்சியடையும் ஆசிய பொருளாதாரத்தின் கண்ணோட்டம் மற்றும்  இலங்கையில் அதன் தாக்கங்கள்”  தொடர்பில்   ஆரம்ப உரையை ஆற்றியதுடன் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பமேலா ஜே. டீன்  மற்றும் வெளிநாட்டு அமைச்சின் பணிப்பாளர்- சர்வதேச மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு- கபில பொன்சேகா ஆகியோரும் உரையாற்றினர்.

ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பூட்டான், பிரேசில், சீனா, கியூபா, எகிப்து, இந்தியா, கென்யா, மலேசியா, மாலைத்தீவு, மொங்கோலியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பலஸ்தீன், செனகல், சிங்கப்பூர், தென் ஆபிரிக்கா, தாய்லாந்து, ஜக்கிய அரபு இராச்சியம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் இந்த அமர்வுகளில் பங்கேற்றனர்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2018 ஒக்டோபர் 16

1????????????????????????????????????

????????????????????????????????????

 

Please follow and like us:

Close