கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவு
கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவானது, கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியாவில் உள்ள நாடுகளுடன் இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கு பொறுப்பாகவுள்ளது. பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு பங்களிக்கும் முன்முயற்சிகளை ஆதரிப்பதல், மூலோபாய கூட்டாண்மைகளை அபிவிருத்தி செய்வதல், இராஜதந்திர உரையாடல்களை எளிதாக்குதல் போன்ற இலங்கையின் நலன்களை முன்னேற்றுவதில் இப்பிரிவு ஈடுபட்டுள்ளது.
கிழக்கு ஆசியாவில் சீனா, ஜப்பான், கொரியா குடியரசு மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகியவை அடங்கும். இப்பிரிவானது, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
ஓசியானியா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பசிபிக் தீவு நாடுகளின் ஒரு பகுதியை உள்ளடக்கியது: பீஃஜி, கிரிபட்டி, நவுரு, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், டோங்கா, துவாலு மற்றும் வனுவாட்டு. இப்பிரிவானது, வர்த்தகம், சுற்றுலா, கல்வி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மூலமாக, அந்நாடுகளுடனான இலங்கையின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்காக இப்பிரிவு செயல்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), பாலி செயல்முறை மற்றும் சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு அமைப்பு (INBAR) போன்ற பிராந்திய அமைப்புகளுடன் உறவுகளைப் பேணும் பணியும் இப்பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.