இலத்திரனியல் ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறைமையை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த்தில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கள் கைச்சாத்திட்டன

இலத்திரனியல் ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறைமையை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த்தில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கள் கைச்சாத்திட்டன

Image-01

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இலத்திரனியல் ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறைமையினூடாக வழங்கப்படுகின்ற ஆவண சான்றுறுதிப்படுத்தல் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிக்கும் நோக்கில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்களுக்கு மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று 16 ஆகஸ்ட் 2018 அன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் (SLIDA) நடைபெற்ற அரச பிரதிநிதிகளுக்கான மாநாட்டின்போது, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன முன்னிலையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ரி. கொடிகார மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இலத்திரனியல் ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறைமையை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிப்பதனை சாத்தியமாக்கும். ஆரம்பமாக காலி மாவட்டத்திலுள்ள 19 பிரதேச செயலகங்களில் ஒரு ஆரம்ப திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும். தொடர்ந்து இந்த வசதியை இலங்கையிலுள்ள 332 பிரதேச செயலகங்கள் அனைத்திற்கும் விஸ்தரிப்பதிற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இலத்திரனியல் ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறைமையை இலங்கையிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களுடன் இணைப்பதானது பொதுமக்கள் தமக்குத் தேவையான ஆவணப்படுத்தல் கருமங்களை கொழும்பிலுள்ள கொன்சியூலர் பிரிவுக்கு வருகை தராமல் தமக்கு மிக நெருக்கமான பிரதேச செயலகங்களில் பூர்த்தி செய்து கொள்வதனை சாத்தியப்படுத்தும். இந்நோக்கத்திற்காக யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய கொனசியூலர் அலுவலகத்திற்கு தற்போது வருகை தரும் வட மாகாண மக்கள்கூட இந்த பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்திற்கு பதிலாக தமக்கு அருகாமையிலுள்ள பிரதேச செயலகங்களுடாக சான்றுறுதிப்படுத்தல் வேலைகளை செய்து கொள்ள முடியுமாக இருக்கும். ஆரம்பத் திட்டத்திற்கு கனடா அரசாங்கம் புலம்பெயர்வுக்கான சர்வதேர அமைப்பினூடாக 6.8 மில்லியன் ரூபா பெறுமதியான கருவிகளை அன்பளிப்புச் செய்திருக்கின்றது.

கைச்சாத்திடும் வைபவத்தின் போது உரையாற்றிய உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன கனடா அரசாங்கத்தினால் ஆரம்ப செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு வழங்கப்பட்ட உபகரணங்களுக்கு நன்றியை தெரிவித்ததுடன் அனைத்து மாவட்டங்களிலும் பிரதேச செயலகங்களில் இலத்திரனியல் முறையில் ஆவணங்களை சான்றுறுதிப்படுத்தலை அமுல்படுத்துவதற்கு அவசியமான பங்களிப்பை விஸ்தரிக்குமாறு அனைத்து அரச பிரதிநிதிகளிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதேச செயலக மட்டங்களில் மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறையானது பாரியளவு அந்நிய செலாவனியை நாட்டிற்கு ஈட்டித்தரும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமூகத்திற்கு வினைத்திறனான சேவையாற்ற முடியும் என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தனது உரையில் தெரிவித்தார்.

இந்த ஆரம்பமானது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முயற்சியின் பங்காக அமைவதுடன் மக்களுக்கான கொன்சியூலர் சேவை விநியோகத்தின் சீரமைப்பு, விஸ்தரிப்பு மற்றும் மேம்படுத்தல், டிஜிட்டல் மயப்படுத்தலின் ஒரு வகிபாகமாக அமைகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

17 ஆகஸ்ட் 2018

Image-02 (1)

Image-03

Please follow and like us:

Close