கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளை இன்று காலை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம அவர்கள் சந்தித்து உரையாடினார்.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை கட்டாயப்படுத்திய தொடர் நிகழ்வுகளை அமைச்சர் தெளிவுபடுத்தினார். தேசிய ரீதியிலான வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி சிறிசேன அவர்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பை வலியுறுத்திய அவர் ஜனாதிபதி அவரது அதிகாரத்தை நேரடியாக மக்களிடமிருந்தே பெற்றிருக்கின்றார் என்றும் கூறினார். அரச உறுப்புக்களுக்கு மத்தியிலான முரண்பாட்டின்போது ஜனநாயகத்தை உறுப்படுத்துகின்ற இறையாண்மை கொண்ட மக்களிடமிருந்து ஓர் ஆணையை தேடுவது அவசியம் என்றும் கூறினார்.
உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த காலப்பகுதிகளில் இலங்கையில் நிலவிய சாந்தியான சூழல் தொடர்பாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டு சுட்டிக்காட்டினார். இது இலங்கை மக்களின் மதிப்பை உணர்த்துவதோடு நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை மீள் உறுதிப்படுத்துகின்றது.
பாராளுமன்ற மரபுகள் புறக்கணிப்பு மற்றும் வளர்ந்து வரும் பதட்டங்களால் அனைத்து இலங்கையரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற பொறுப்பை நிறைவேற்றதிகாரம் மேற்கொள்கின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் இந்த உள்விவகாரத்தை தீர்த்துக் கொள்வதில் இலங்கையின் நீண்ட ஜனநாயக பாரம்பரிய பலத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையினை வெளிப்படுத்தினர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
12 நவம்பர் 2018