யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸூலேயின் இலங்கைக்கான விஜயம்

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸூலேயின் இலங்கைக்கான விஜயம்

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸூலே, இலங்கை அரசின் அழைப்பின் பேரில், 2024 ஜூலை 16 முதல் 19 வரையில், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது பணிப்பாளர் நாயகம் அஸூலே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதுடன், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அவர், "நெலும் பொகுண" திரையரங்கில் இடம்பெறவுள்ள, யுனெஸ்கோ அமைப்பில் இலங்கையின் அங்கத்துவத்திற்கான  75வது ஆண்டு விழாக்கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்கவுள்ளத்தைத் தொடர்ந்து, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சிறப்புமிக்க தளங்களுக்கு விஜயமளிக்கவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 ஜூலை 12
Please follow and like us:

Close