இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் 30 டிசம்பர் 2019 ஆந் திகதிய இராஜதந்திரக் குறிப்பு

இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் 30 டிசம்பர் 2019 ஆந் திகதிய இராஜதந்திரக் குறிப்பு

ஊடக வெளியீடு

இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இராஜதந்திரக் குறிப்பை 2019 டிசம்பர் 30 ஆந் திகதி இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சிற்கு அனுப்பியுள்ளது.

இந்தக் குறிப்பை இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆகியன ஒரே நேரத்தில் வெளியிடுகின்றன.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
31 டிசம்பர் 2019
---------------------------------

இலங்கைமற்றும்மாலைதீவிற்கானசுவிட்சர்லாந்துதூதரகம்

கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சிற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன், பின்வருவனவற்றை தெரிவிக்க விரும்புகின்றது:

சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை பல தசாப்தங்களாக சிறந்த உறவுகளைப் பேணி வருவதுடன், இரு நாடுகளின் நலனுக்காகவும், அவற்றின் மக்களுக்காகவும் பல்வேறு துறைகளில் கணிசமான ஒத்துழைப்புக்களில் ஈடுபட்டுள்ளன. இரு நாடுகளும் இந்த உறவுகளை பெரிதும் மதிக்கின்றன.

கடந்த சில வாரங்களில், தூதரகத்தின் உள்நாட்டு ஆட்சேர்ப்பு அடிப்படையிலான ஊழியர் ஒருவருடன் சம்பந்தப்பட்ட சம்பவம், அதனைத் தொடர்ந்து அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டமை தொடர்பிலான தவறான புரிதல்களால் இந்த உறவில் சிதைவுகள் ஏற்பட்டன. இந்த சூழலில், பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட உறுதிப்படுத்தப்படாத விடயங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்த விடயம் தொடர்பில் எந்த நேரத்திலும் இலங்கை அரசாங்கத்தின் பிம்பத்தைக் கெடுக்கும் நோக்கம் சுவிட்சர்லாந்திற்கு இருந்ததில்லை.

இந்த முன்னேற்றங்கள் இலங்கை அதிகாரிகளின் உரிய செயன்முறை ஈடுபாடு குறித்து கேள்வித்தன்மைக்கு வழிவகுத்தமைக்காக தூதரகம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதுடன், இலங்கையைப் போலவே சுவிட்சர்லாந்தும் நல்லாட்சியையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்துவதற்காக உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நேர்மறையான ஒத்துழைப்பை மீண்டும் தொடங்குவதற்கு உகந்த சூழலுக்கு விரைவாக திரும்ப வேண்டும் என தூதரகம் நம்புகின்றது. உள்நாட்டு ஆட்சேர்ப்பு அடிப்படையிலான ஊழியர் உள்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டவர் என்பதனை அங்கீகரித்துள்ள தூதரகம், இரு தரப்பினரும் இராஜதந்திர தூதரகங்களின் அனைத்து ஊழியர்களினதும் பணி நிலைமைகள் மற்றும் நல்வாழ்வு ஆகியவை குறித்து கவனம் செலுத்துவர் என உறுதியாக நம்புகின்றது. தனது ஆட்புலத்தில் உள்ள இராஜதந்திர தூதரகங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு குறித்த அரசாங்கத்தைச் சார்ந்ததாகும் என்பதனை சுவிட்சர்லாந்து நினைவுகூர்கின்றது.

இலங்கையுடனான தனது உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, இந்த உறவுகளை ஆக்கபூர்வமான முறையில் பராமரிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் உறுதியளித்துள்ளதுடன், இரு நாடுகளும் ஒன்றிணைந்து பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட உறவுகளைத் தொடர்ந்து கட்டியெழுப்பும் என நம்பிக்கை கொண்டு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடனான உறவுகளை உயரிய கரிசனையின் அடிப்படையில் புதுப்பிப்பதற்காக இந்த சந்தர்ப்பத்தை கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் பயன்படுத்திக் கொள்கின்றது.

கொழும்பு, 2019 டிசம்பர் 30
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
Please follow and like us:

Close