வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் 4வது ஐரோப்பிய ஒன்றிய-இந்து பசிபிக் அமைச்சர்கள் மன்றத்தில் பங்கேற்பு

 வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் 4வது ஐரோப்பிய ஒன்றிய-இந்து பசிபிக் அமைச்சர்கள் மன்றத்தில் பங்கேற்பு

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர 4வது ஐரோப்பிய ஒன்றிய-இந்து பசிபிக் அமைச்சர்கள் மன்றத்தில் கலந்து கொள்வதற்காக 2025, நவம்பர் 19 முதல் 22 வரை பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய- இந்து பசிபிக் அமைச்சர்கள் மன்றத்தின் உயர்மட்ட அமர்வுகளில் பிரதி அமைச்சர் பங்கேற்கவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள முக்கிய துறைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 2025, நவம்பர் 18

Please follow and like us:

Close