பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழுவினரின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுடனான சந்திப்பு

 பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழுவினரின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுடனான சந்திப்பு

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் கற்கைநெறி 2023/2024 இற்கான பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 16 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று (07) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்தனர். சிரேஷ்ட இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் உள்ளடங்கிய தூதுக்குழு, பிராந்திய நாடுகளுக்கான கற்கைநெறி ஆய்வுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது இலங்கைக்கு வந்துள்ளது.

வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, தூதுக்குழுவினரை வரவேற்று உரையாற்றிய போது, ​​இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் வலுவான உறவுகளையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் எடுத்துரைத்தார். வெளிவிவகாரச் செயலாளரின் பணியகத்தின் பணிப்பாளர் மேக்ஸ்வெல் கீகல், ‘இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை’ பற்றிய விளக்கமொன்றை வழங்கினார், அதைத் தொடர்ந்து ஒரு சுருக்கமான ஊடாடும் அமர்வு இடம்பெற்றது.

பாகிஸ்தான் பாதுகாப்புக் குழுவுக்கு, பாகிஸ்தானிய வான்படைத்தளபதி பைசல் ஃபசல் முஹம்மது கான் தலைமை தாங்கினார். அமைச்சின் தெற்காசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் நிலுக கதுருகமுவ மற்றும் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.

பாதுகாப்புத் துறையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பரஸ்பர ஆர்வமுள்ள பல பகுதிகளை இச்சந்திப்பு உள்ளடக்கியிருந்தது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 மே 07

 

Please follow and like us:

Close