இலங்கையின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் )DSCSC) இளங்கலை பட்டதாரிகள், இந்தோனேஷியாவிற்கான, ”சர்வதேச ஒத்துழைப்பு ஆய்விற்கான கள சஞ்சாரம்” ஒன்றினை, 2023, செப்டம்பர் 4 முதல் 14 வரை, மேற்கொண்டு, வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இக்குழுவானது, இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும், இலங்கையின் சப்புகஸ்கந்தையிலுள்ள DSCSC இல், பணியாளர்கள் கற்கைநெறியைப் பின்பற்றும் ஐந்து வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட , 32 அதிகாரிககளை உள்ளடக்கியுள்ளது. இப்பணிக்குழுவிற்கு DSCSC யின் துணைத்தளபதியான,பிரிகேடியர் ஏ.பி விக்கிரமசேகர யுஎஸ்பி பிஎஸ்சி தலைமை தாங்கினார்.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் இந்தோனேசியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் ஆசியான் அட்மிரல், பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகேவை, ஜகார்த்தாவிலுள்ள இலங்கை தூதரகத்தில், 2023, செப்டெம்பர் 05 அன்று, சந்தித்து மரியாதை செலுத்தினர். தூதுவர் இந்தோனேஷியாவின் வரலாறு, பொருளாதாரம், அரசியல் நிலைமைகள் மற்றும் இந்தோனேஷியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் ஆகிய விடயங்கள் மாணவர்களுக்கு, இதனை நடத்தும் நாடு பற்றிய கல்வியை ஆழமாக மேற்கொள்ள ஏதுவாய் அமைந்ததுள்ளது என்பதை விளக்கினார்.
பணிக்குழுவானது, கல்வி ஆய்வுச்சுற்றுலாவின்போது, முப்படைத் தலைமையகம் (NI), கடலோர காவல்படை தலைமையகம், வர்த்தக அமைச்சகம், ராணுவப் பணியாளர் கல்லூரி (SESKOAD), கடற்படை (SESKOAL) மற்றும் விமானப்படை (SESKOAU), இந்தோனேசிய விண்வெளித் தொழில் (PTDI), மற்றும் பாண்டுங்கில் உள்ள, ஆசியா ஆப்பிரிக்கா மாநாட்டு மண்டபம் ஆகிய இடங்களுக்கு சஞ்சரித்தது.
இவ்விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான குறிப்பாக, தொழில்முறை இராணுவக் கல்வித் துறையில் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்த, உதவியது. ஜகார்த்தாவிற்கான இலங்கைதூதரகம், இந்த விஜயத்தை ஒருங்கிணைத்தது.
இலங்கை தூதரகம்
ஜகார்த்தா
19 செப்டம்பர் 2023