மரணத்திற்கான நட்டஈடு
தகைமை பெறுவோர் : புலம்பெயர் இலங்கைப் பணியாளர்கள்
விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் முறை : அவசியமான தகவல்களுடன் விண்ணப்பத்தை கொன்சியூலர் பிரிவில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்
விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளும் இடங்கள் :
விண்ணப்பக் கட்டணம் : இலவசம்
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான நேரம் : 08.00 மணி – 15.00 மணி
இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்தப்படும் கட்டணம் : இலவசம்
சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் : சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பிலான வழக்கு நடவடிக்கைகளை நீதிமன்றம் முடிவுறுத்தியவுடன் அல்லது வெளிநாட்டுத் தொழில் தருநர் சட்டரீதியான நிலுவைகளை செலுத்தியவுடன்
தேவையான துணை ஆவணங்கள்
அறிக்கையிடும் நிகழ்வுகளின் சூழ்நிலைக்கேற்ப நடைமுறைகள் வேறுபடுவதனால், விண்ணப்பதாரி / முறைப்பாட்டாளர் / உறவினர் விடயத்திற்குப் பொறுப்பான அலுவலரை அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் சந்திக்க வேண்டும். குறித்த தகவலுக்காக, தொடர்புடைய குறித்துரைத்த தகவல்களைப் பார்க்கவும்.
விண்ணப்பப் படிவம் : முறைப்பாட்டுக்கான கோரிக்கைக் கடிதம் மாத்திரம் கோரப்படும்
விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- நெருங்கிய உறவினரால் முறையாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம்
- நட்டஈட்டுக் கோரிக்கைக் கடிதம்
- தொழில்தருநர் பற்றிய தகவல்கள்
- சேவை ஒப்பந்தம்
- கம்பனி அடையாள அட்டை
- காப்புறுதி விபரங்கள்
- வங்கி விபரங்கள்
- மருத்துவ அறிக்கைகள் (தேவையாயின்)
– வழக்குகளுக்காக –
- அற்றோனித் தத்துவம்
- சட்டரீதியான பின் உரித்தாளிச் சான்றிதழ்
- பாதுகாவலர் சான்றிதழ் (18 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் இருப்பின்)
- மன்னிப்புக் கடிதம் (கொலை வழக்கு)
- ஏனைய பொருத்தமான சட்ட ஆவணங்கள் (பிறப்புச் சான்றிதழ் / திருமணச் சான்றிதழ், ஏனையவை)
இறந்தவர் வழக்கொன்றில்; குற்றஞ்சாட்டப்பட்டவராக நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமாயின், நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கு சாத்தியம் இல்லை.
கோரிக்கை செய்யப்படும் ஆவணங்கள் வழக்கு மற்றும் நாட்டிற்கு அமைவாக காணப்படும்.
இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு