இலங்கைக்கான பஹ்ரைன் தூதுவரின் நியமனம்

இலங்கைக்கான பஹ்ரைன் தூதுவரின் நியமனம்

7

மேன்மைதங்கிய தாரிக் முபாரக் பின் தைனேஹ் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பஹ்ரைன் இராச்சியத்தின் உயர்ஸ்தானிகராக திரு. அப்துல்ரஹ்மான் முஹம்மட் அல்கவுத் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பஹ்ரைன் இராச்சிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 06 மே 2019 அன்று சமர்ப்பித்தார்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

06 மே 2019

 

Please follow and like us:

Close