இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவனத்தில் பட்டப்பின்படிப்புக்களைப் பயிலும் பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊடாடும் அமர்வை மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஏற்பாடு

 இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவனத்தில் பட்டப்பின்படிப்புக்களைப் பயிலும் பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊடாடும் அமர்வை மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஏற்பாடு

2023 ஜனவரி 24ஆந் திகதி, மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் கலாநிதி வல்சன்வேத்தோடி, மும்பையில் உள்ள இந்திய ஜனநாயகத் தலைமைத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் மற்றும் 06 ஆசிரிய உறுப்பினர்களிடம் உரையாற்றினார். மும்பையில் உள்ள பெறுமதி வாய்ந்த நிறுவனமான இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவனம், அரசியல் மற்றும் ஆளுகை ஆகியவற்றில் பட்டப்பின்படிப்பு கற்கைகளை வழங்குகின்றது.

விளக்கக்காட்சியைத் தொடர்ந்து மிகவும் சுறுசுறுப்பான ஊடாடும் அமர்வு நடைபெற்றது. தூதரக வளாகத்தில் வழங்கப்பட்ட மதிய உணவுடன் அமர்வு நிறைவுற்றது.

இலங்கையின் துணைத் தூதரகம்,

மும்பை

2023 பிப்ரவரி 06

Please follow and like us:

Close