கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு
- கொன்சுலர் விவகாரங்கள் பிரிவானது பொது மக்களுக்கு கொன்சுலர் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவதுடன், வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்களின் கொன்சுலர் மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது.
- இணையவழி சான்றளிப்பு முறைமைகள், வெளிநாடுகளில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றும் இலங்கையிலுள்ளவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புதல், இலங்கையர்களின் இறந்த சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருதல், வெளிநாட்டில் இறந்த மற்றும் காயமடைந்த இலங்கையரின் சார்பாக இழப்பீடு மற்றும் ஏனைய உரிமைகளைப் பெறுதல் மற்றும் இதர உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான சேவைகளை கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு மேற்கொள்கின்றது.
- கொன்சுலர் விவகாரங்கள் பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் சான்றளிப்பு செயன்முறையானது, சேவையை மேம்படுத்துவதனையும், நெறிப்படுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டு, ஈ-டாஸ் மூலம் கிளவுட் கம்ப்யூட்டிங்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதுமையான டிஜிட்டல் தளம் மூலமாக மேற்கொள்ளப்படுவதுடன், இது வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள், கொழும்பைத் தளமாகக் கொண்ட தூதரகங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுடனான உண்மையான நேர அளவுடனான விரைவான சரிபார்ப்பு செயன்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- அரசாங்கக் கொள்கையின் பிரகாரம், இலங்கையிலும் வெளிநாட்டிலுமுள்ள மக்களுக்கு தேவைப்படும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையில் பிராந்திய கொன்சுலர் அலுவலகங்களை 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே நிறுவியதன் மூலமாகவும் மற்றும் இலங்கை மற்றும் வெளிநாட்டு நகரங்களில் நடமாடும் சேவைகளை நடாத்துவதன் மூலமாகவும் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு திறமையாகவும், நேர்த்தியாகவும் சேவைகளை வழங்க முயற்சிக்கின்றது