கொன்சல் ஜெனரல் சந்தித் சமரசிங்க, தெற்கு அவுஸ்திரேலியாவின் அடலெய்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது முதலீட்டு சந்திப்புகளின் தொடரை வெற்றிகரமாக முடித்தமை

கொன்சல் ஜெனரல் சந்தித் சமரசிங்க, தெற்கு அவுஸ்திரேலியாவின் அடலெய்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது முதலீட்டு சந்திப்புகளின் தொடரை வெற்றிகரமாக முடித்தமை

கொன்சல் ஜெனரல் சந்தித் சமரசிங்க, தெற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி, Andrew Kay ஐச் சந்தித்தார். இலங்கையில், தெற்கு அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா த்துறையை மேம்படுத்துதல் தொடர்பாக அவர்களது கலந்துரையாட லில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

கொன்சல் ஜெனரல், சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் பல்கலாச்சார தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் சுற்றுலாத்துறைக்கான பிரதி அமைச்சர் ஜிங் லீ எம்எல்சி ஆகியோரை தெற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற இல்லத்தில் சந்தித்தார். இலங்கையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் இருந்தமை கண்டறியப்பட்டது.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சரும், வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும், திட்டமிடல் அமைச்சருமான நிக் சாம்பியனுடன் அவரது இறுதி சந்திப்பு அமைந்தது. இக்கலந்துரையாடலில் இலங்கையின் காலநிலை வளத் திட்டம் மற்றும் பசுமை சக்தி மூலங்களில், முதலீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அடலெய்டில் நடைபெற உத்தேசிக்கப்பட்டிருந்த இலங்கை வீதிக்கண்காட்சி, “ Sri Lanka Tourism Roadshow”க்கு, அமைச்சர் தனது ஆதரவைத்தெரிவித்திருந்தார்.

தென் அவுஸ்திரேலியாவின் இலங்கை தொழில்முயற்சியாளர் சங்கம் (CEASA) மற்றும் அடலெய்டில் உள்ள இலங்கைக்கான துணைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, "இலங்கையில் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்", என்ற தொனிப்பொருளினாலான கூட்டத்துடன் நாள் நிறைவு பெற்றது. கொன்சல் ஜெனரல் சமரசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட விளக்கக்காட்சியில், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் முன்வைக்கப்பட்டது. அவரது விளக்கக்காட்சியில், புதிய துறைமுக நகர அபிவிருத்தி தொடர்பான விளக்கமும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டதுடன், அவர்கள் மெல்பேர்னில் உள்ள இலங்கை வர்த்தக அலுவலகத்துடன் தொடர்ந்து ஒத்துழைக்க ஊக்குவிக்கப்பட்டனர். அடலெய்டில் உள்ள இலங்கையின் துணைத்தூதுவர் கலாநிதி சரிதா பெரேரா, இவ்வனைத்து கூட்டங்களையும் ஏற்பாடு செய்ததுடன், அவையனைத்திலும் கலந்து சிறப்பித்தார்.

இலங்கை துணைத் தூதரகம்

மெல்போர்ன்

2023 செப்டம்பர் 13

Please follow and like us:

Close