தாரா நிகழ்வில் மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் கௌரவ விருந்தினராகவும் பேச்சாளராகவும் பங்கேற்பு

தாரா நிகழ்வில் மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் கௌரவ விருந்தினராகவும் பேச்சாளராகவும் பங்கேற்பு

தென்கிழக்கு ஆசியாவுடனான இந்தியாவின் கலாச்சாரத் தொடர்பு, உறவுகள் மற்றும் அதன் முன்னோக்கிச் செல்லும் வழியை வெளிப்படுத்துவதற்காக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விப் பேரவையில் உள்ள கல்வி அமைச்சின் இந்திய அறிவு அமைப்புக்கள் பிரிவு, கலாச்சார அமைச்சுடன் இணைந்து மும்பையில் 2023 ஜனவரி 09ஆந் திகதி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா மற்றும் மும்பையில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள், முதுகலை மற்றும் கலாநிதிக் கற்கை மாணவர்கள் இதில் கலந்து கொண்ட ஏனைய பங்கேற்பாளர்களாவர்.

தனது உரையில், மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் கலாநிதி வல்சன் வேத்தோடி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால கலாச்சார உறவுகளைக் குறிக்கும் இரு தேசங்களுக்கிடையில் உள்ள இந்து மற்றும் பௌத்த உறவுகள் குறித்து பேசுவதற்குத் தேர்ந்தெடுத்தார். இலங்கையின் இறையாண்மையில் சமரசம் செய்யாமல் நுட்பமான இராஜதந்திரத்தால் நிர்வகிக்கப்படும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை எடுத்துரைத்து அவர் உரையை முடித்தார். அவரது உரையைத் தொடர்ந்து ஒரு ஊடாடும் அமர்வு நடைபெற்றது.

 

இலங்கையின் துணைத் தூதரகம்,

மும்பை

2023 ஜனவரி 17

Please follow and like us:

Close