‘தேசத்திற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சியின் கீழ் முல்லைத்தீவில் நடமாடும் கன்சியூலர் சேவை

‘தேசத்திற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சியின் கீழ் முல்லைத்தீவில் நடமாடும் கன்சியூலர் சேவை

Pic_1

பொது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு துரித மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற ‘தேசத்திற்காக ஒன்றிணைவோம்’ தேசிய நிகழ்ச்சியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நான்காவது முறையாகவும் பங்குபற்றியது.

ஜனாதிபதி செயலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, 07 ஜூன் 2019 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் அமைச்சு ஓர் நடமாடும் கன்சியூலர் சேவையை ஒழுங்கு செய்தது. மேலும் 08 ஜூன் 2019 அன்று ஜனாதிபதியால் தலைமை தாங்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு அமர்விலும் பங்குபற்றியது.

‘தேசத்திற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சியின் கீழால் நடாத்தப்படுகின்ற கன்சியூலர் நடமாடும் சேவையினூடாக புலம்பெயர்ந்த தொழிலார்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அமைச்சு தீர்வுகளை வழங்குவதுடன் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டுக்கு மீளழைத்து வருதல் தொடர்பான பல விடயங்களை எளிதுபடுத்துகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

19 ஜூன் 2019 

-----------------------

Pic_2

Pic_3

Please follow and like us:

Close